கம்பராமாயணம் 1294 · பால 21.61

Section பால காண்டம் / 21. கடிமணப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மேவு அரும் சுடர் என விளங்கும் மார்பின் நூல்
ஏவரும் தெரிந்து இனிது உணர்மின் ஈண்டு எனத்
தேவரும் முனிவரும் தெரிக்கலா முதல்
மூவரும் தான் என முடித்தது ஒத்ததே.

பொருள் · Meaning in Tamil

மேவு அரும் சுடர் ஒளி விளங்கும் மார்பின்நூல் - (மிகு ஒளியில் அருகில்) நெருங்குவதற்கரிய சூரியன், சந்திரன், தீ எனும் முச்சுடர்கள் போலே, மார்பில் விளங்குகின்ற முப்புரி நூலானது; தேவரும் முனிவரும் தெரிக்கலா முதல் மூவரும் தான் என - தேவர்களும் முனிவர்களும் இன்னதென்று அறிவித்து விட இயலாத மும்மூர்த்திகளின் வடிவமும் தானே (இராமனே) என்று; ஈண்டு ஏவரும் தெரிந்து இனிது உணர்மின் என - இங்கே எல்லோரும் ஆராய்ந்து, இனிதாய் அறிந்துணருங்கள் (முடிவுக்கு வாருங்கள்) என்று; முடித்தது ஒத்ததே - (அதற்கு அடையாளச் சின்னமாக) (முடியிட்டதைப் போன்று) முடியப்பட்டிருந்தது. மூன்று மூர்த்திகளின் ஒருங்கிணைந்த வடிவமே இராமன் என ஆனான் என்னும் தமது கடவுட் கொள்கையைக் கம்பர் இங்குத் தெளிய உணர்த்தும் திறம் காண்க. “மூன்று கவடாய் முளைத்தெழுந்த மூலமே” (கம்ப. 3682) “செங்கண்மால் நான்முகன் சிவன் என்றே கொலோ எங்கள் நாயகனையும் நினைத்தி ஏழை நீ” (கம்ப. 5194) “முத்தேவரின் மூல முதற் பொருளாம் அத்தேவர் இம் மானிடர்” (கம்ப. 3410) எனவும் மேலும் பல இடங்களில் உணர்த்திப் போவதை ஆங்காங்குக் கண்டு தெளியலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The sacred thread on his chest, shining like lights too bright to approach,
  2. was as if a knot had been tied to say: 'Let everyone here see this clearly and understand:
  3. the three first gods, whom neither gods nor sages
  4. can make out, are he himself.'

What the poem says

Irāmaṉ wears the sacred thread of three strands across his chest, shining like the three great lights, sun, moon and fire. The knot that ties the three strands together seems to proclaim to everyone in the hall that the three supreme gods, Brahmā, Viṣṇu and Śiva, whose nature even gods and sages cannot fathom, are united in him.

The commentary takes this as Kampaṉ's own theology, which he states in several other places in the epic: Irāmaṉ is the single root from which the three gods branch out.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mēvu aruñ cuṭar oḷi viḷaṅkum mārpiṉ nūl
ēvarum terintu iṉitu uṇarmiṉ īṇṭu eṉa,
tēvarum muṉivarum terikkalā mutal
mūvarum tāṉ eṉa muṭittatu ottatē.