கம்பராமாயணம் 1295 · பால 21.62
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சுற்றும் நீள்தமனியச் சோதி பொங்க - சுற்றுப்புறங்களில் எல்லாம் நீண்டு பொன் மயமான ஒளி பரவ; மேல் ஒற்றை மாமணி உமிழ் உதர பந்தனம் - மேலே ஒற்றையாகப் பெரிய மாணிக்கம் ஒன்றை ஒளிவிளங்கப் பதித்த உதர பந்தனம் எனத் திருவயிற்றின் மேல் இட்ட அணியானது; மற்றும் ஓர் அண்டமும் அயனும் வந்து எழ - (இப்பொழுதுள்ள அண்டங்களேயன்றி) வேறும் ஓர் அண்டமும், அதனைப் படைக்கும் பிரமனும் வந்து தோன்றும்படி; பொன் தடந்தாமரை பூத்த போன்றதே - பொன்நிறமான பெரிய தாமரை மலர் ஒன்றைத் திருநாபி பூத்ததைப் போன்றிருந்தது. அரை ஆடை நழுவாமல் வயிற்றின் மீது அணியும் அணி உதர பந்தனம் ஆகும். இராமன் அவ்வணியை அணிந்தது இன்னுமோர் அண்டத்தையும் இன்னுமோர் பிரமனையும் படைக்கக் கருதி, தன் நாபியில் மேலும் ஒருகமலத்தைப் பூத்தது போன்றிருந்தது எனத் தன் குறிப்பை ஏற்றிக் கூறினார். உதர பந்தனத்தைச் சுற்றியெழுந்த பொன்மயமான ஒளி வெள்ளத்தை அண்ட கோளமாகவும், உந்தித் தாமரை, உதர பந்தத்தின் முகப்பாகவும் அவ்வணியின் நடுவில் திகழும் மணியைப் பிரமனாகவும் கொள்க. திருமால் தன் நாபிக் கமலத்தில் பிரமனைப் படைக்கின்றான்; அவன் பொன்மயமான அண்டங்களைப் படைக்கின்றான் என்பது நூற் கொள்கை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With the light of long gold welling up all round it,
- the belly band with a single great gem shining on top
- was like a broad golden lotus that had bloomed
- so that another cosmos and another Ayaṉ might arise.
What the poem says
Irāmaṉ fastens on the utarapantaṉam, a gold band worn over the belly to hold the lower garment in place, with one large ruby in its centre.
As Viṣṇu, Irāmaṉ has a lotus growing from his navel, and in that lotus sits Ayaṉ (Brahmā), who creates the golden cosmic egg. The jewelled band looks as if his navel had put out a second golden lotus, ready to produce a second Brahmā and a second universe. The golden glow round the band is the new cosmos and the central gem is its creator.