கம்பராமாயணம் 1296 · பால 21.63

Section பால காண்டம் / 21. கடிமணப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மண் உறு சுடர்மணி வயங்கித் தோன்றிய கண்ணுறு கருங்கடல் அதனை - சாணைப் பிடித்துத் தீற்றிய ஒளி விளங்குகின்ற மாணிக்கங்கள் தோன்றுதற்கு இடமாய்க் கண்ணுக்குப் புலப்படுகின்ற கரிய கடலை; கைவளர் தண் நிறப் பாற் கடல் தழீஇயது ஆம் என - அலைக்கரங்கள் வளர்கின்ற குளிர்ந்த தன்மையையுடைய பாற்கடல் தழுவிய காட்சி இது என்று கூறலாம்படி; வெண்நிறப் பட்டு ஒளி விளங்கச் சாத்தியே - வெண்மை நிறமுடைய பட்டாடையை ஒளி விளங்குமாறு தன் இடையிலே உடுத்து (அணி செய்தான் இராமன்.)

கருங்கடல் பாற்கடல் உடுத்தது போல, இராமன் தன் கரிய திருமேனியில் வெண்பட்டை உடுத்தான் என்க. மண்ணுதல்: கழுவுதலுமாம். முத்து முதலிய இரத்தினங்கள் நீராற் கழுவித் தூயதாக்கலின் “மண்ணுறு சுடர்மணி” என்றார் எனினுமாம். “கற்பால் உமிழ்ந்த மணியும் கழுவாது விட்டால், நாற்பால அழியும்” (சீவக. அவையடக) என்பர். மணி அணிகள் பல அணிந்து விளங்கும் கருநீலக் கடலும் உடுத்திருந்த வெண் பட்டாடைக்குப் பாற்கடலும் உவமை. மங்கல நிறமாதலின் வெண்பட்டாடை கூறினார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As if the cool white sea of milk with its spreading arms
  2. had embraced the dark sea that meets the eye,
  3. where polished, shining gems lie gleaming,
  4. he put on white silk, so that its lustre shone.

What the poem says

Irāmaṉ puts on a garment of white silk, white being the auspicious colour for a wedding. His dark body, glittering with polished jewels, is the dark ocean in which gems are found; the white silk wrapped round it is the ocean of milk embracing it with the arms of its waves.

The commentary explains 'polished gems' as stones that have been cut on the wheel or washed clean, citing a line that even gems lose their worth if left unwashed.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṇṇuṟu cuṭar maṇi vayaṅkit tōṉṟiya
kaṇṇuṟu karuṅ kaṭalataṉai kai vaḷar
taṇ niṟap pāṟkaṭal taḻīiyatu ām eṉa
veṇ niṟap paṭṭu oḷi viḷaṅkac cāttiyē.