கம்பராமாயணம் 1297 · பால 21.64

Section பால காண்டம் / 21. கடிமணப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சலம் வரு தரளமும், தயங்கு நீலமும் - கடல் நீரில் தோன்றுகின்ற (வெண்) முத்துக்களும், ஒளிகின்ற நீல நிறமுடைய மாணிக்கங்களும்; அலம் வரு நிழல் உமிழ் அம்பொன் கச்சினால் - அசைவதனால் ஒளி உமிழ்கின்ற அழகிய பொன்னால் ஆகிய இடைக் கச்சினால்; குலம் வரு கனகவான் குன்றை நின்று உடன் வலம் வரு கதிர் என - சிறப்புடைய பொன்மயமான மேருமலையைச் சேர வலம் வந்து நிற்கின்ற சூரியனைப் போல; வாளும் வீக்கியே - உடை வாளினை இடையில் கட்டி (இராமன் அணிசெய்தான்.)

இராமனது திருமேனி கரிய நிறத்தது ஆயினும், அணிந்த அணிகளின் ஒளியால் பொன்னிறம் பெற்றதாதலின் இடையினை, கனகக் குன்றாகிய மேரு மலைக்கும், உடைவாளினைச் சூரியனுக்கும் உவமித்தார். தரளம்: முத்து. கனகம்: பொன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With a sash of fine gold that gives off a moving light
  2. from sea-born pearls and gleaming sapphires,
  3. like the sun that stands circling the noble golden mountain,
  4. he girded on his sword as well.

What the poem says

Irāmaṉ straps on his sword with a golden sash set with pearls and sapphires, which flashes as it moves.

His waist, glowing gold in the light of all his ornaments even though his body is dark, is compared to Mount Mēru, the golden mountain, and the sword that goes round it to the sun circling Mēru.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1calam varu taraḷamum tayaṅku nīlamum
alamvaru niḻal umiḻ am poṉ kacciṉāl
kulam varu kaṉaka vāṉ kuṉṟai niṉṟu uṭaṉ
valamvaru katir eṉa vāḷum vīkkiyē.