கம்பராமாயணம் 1303 · பால 21.70
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பல்பதின் ஆயிரம் பசுவும் பைம் பொன்னும் - (பின்பு) பத்தாயிரக் கணக்கான பசுக் கூட்டங்களையும் பசும் பொன்னையும்; எல்லை இல் நிலனொடு மணிகள் யாவையும் - வரம்பில்லாத நிலங்களையும் நவரத்தினங்களையும்; நல்லவர்க்கு உதவினான் - நல்லொழுக்கமுடைய அருளாளர்கட்குக் கொடையாகக் கொடுத்தவனாகிய இராமன்; நவிலும் நான்மறைச் செல்வர்கள் வழுத்துற - போற்றற்குரிய நான்கு வேதங்களையே தம் செல்வமாக உடைய அந்தணாளர்கள் வாழ்த்துக்கள் நிறைய; தேர் வந்து ஏறினான் - தேரில் வந்து ஏறினான்.
கோதானமும், பூதானமும் ஸ்வர்ண தானமும் இரத்தின தானமும் நல்லோர் மகிழக் கொடுத்து இராமன் தேர் ஏறினன் என்க. நற்பெருஞ் செயல்கள் புரியப் புகுமுன், கொடை கொடுத்து, நல்லோரை மகிழச் செய்யும் மரபை மறவாமல் இங்குக் குறித்தார். உதவினான் - வினையால் அணையும் பெயர். உதவினான் என்பதனை முற்றெச்சமாகக் கொள்ளின் இராமன் என்னும் (தோன்றா) எழுவாயை வருவித்துப் பொருள் கூறுக. “அறப்பயன், தக்கார் கைப்பட்டக்கால் வான் சிறிதாப் போர்த்துவிடும்” (நாலடி. 38) ஆதலால், “நல்லவர்க்கு உதவினான்” என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Many tens of thousands of cows, and fresh gold,
- land without limit, and gems of every kind
- he gave to the worthy; and as the masters of the four Vedas they recite
- sang his praise, he came and mounted the chariot.
What the poem says
Before setting out, Irāmaṉ makes the customary gifts that precede any great and auspicious undertaking: tens of thousands of cows, gold, endless land and every kind of jewel, all given to good and deserving people. Then, as the Vedic Brahmins chant blessings, he climbs into his chariot.
The commentary quotes the Nālaṭiyār: a gift that reaches a worthy hand grows until it covers more than the sky.