கம்பராமாயணம் 1304 · பால 21.71

Section பால காண்டம் / 21. கடிமணப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பொன் திரள் அச்சது, வெள்ளிச் சில்லி புக்கு
உற்றது, வயிரத்தின் உற்ற தட்டது,
சுற்று உறு நவம் மணி சுடரும் தோற்றத்தது,
ஒற்றை ஆழிக் கதிர்த் தேரொடு ஒத்ததே.

பொருள் · Meaning in Tamil

பொன் திரள் அச்சது - பொன்னால் ஆன திரண்ட அச்சினையுடையதும்; வெள்ளிச் சில்லி புக்கு உற்றது - வெள்ளியினால் ஆன சக்கரங்கள் நுழையப் பொருந்தியதும்; வயிரத்தின் உற்ற தட்டது - வச்சிர மணியால் ஆன தட்டினையுடையதும்; சுற்று உறு நவமணி சுடரும் தோற்றத்தது - சுற்றிலும் பொருந்திய நவமணிகளால் நெடுந் தொலைவின் அளவும் ஒளிவீசும் காட்சியையுடையதும் ஆகிய அந்த இராமபிரான் ஏறிய தேர்; ஒற்றை ஆழிக் கதிர்த் தேரொடு ஒத்ததே - ஒற்றைச் சக்கரத்தையுடைய சூரியனது தேரொடு ஒத்து விளங்கியது.

சூரியனது ஒற்றைச் சக்கரத் தேர் ஒளியாலும் வேகத்தாலும் உவமையாயிற்று. சூரிய மண்டல மத்தியில் சூரிய நாராயணன் எழுந்தருளியிருப்பதாலும் உவமையாம் எனினுமாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Its axle was a solid bar of gold, silver wheels
  2. were fitted onto it, its floor was made of diamond,
  3. and all round it was set with the nine gems:
  4. it was like the one-wheeled chariot of the sun.

What the poem says

A description of Irāmaṉ's wedding chariot. Its axle is solid gold, its wheels silver, its floor diamond, and the nine kinds of precious stone are set all round it, flashing far into the distance.

It looks like the sun's one-wheeled chariot, in its brilliance and its speed. The commentary adds that the comparison also fits because Viṣṇu, as Sūrya Nārāyaṇa, is said to sit at the centre of the sun's disc, just as Irāmaṉ sits at the centre of this chariot.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1poṉ tiraḷ accatu, veḷḷic cilli pukku
uṟṟatu, vayirattiṉ uṟṟa taṭṭatu,
cuṟṟu uṟu nava maṇi taṭu tōṟṟattatu,
oṟṟai āḻik katirt tēroṭu oppatē.