கம்பராமாயணம் 1305 · பால 21.72
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நூல் வருந்தகையன - அசுவ சாத்திரத்தில் கூறப்படும் உத்தம இலக்கணங்களை உடையவையும்; நுனிக்கும் நோன்மைய - கூர்ந்து உணர்தற்கேற்ற ஆற்றலையுடையவையும்; சால் பெரும் செவ்விய - நிரம்பிய பேரழகுடையவையும், தருமம் ஆதிய நாலையும் அனையன - அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நால்வகைப் புருடார்த்தங்களைப் போன்று யாவராலும் அடைய விரும்பப்படுபவையும் ஆகிய; புரவி நான்கு ஒரு பாலமை உணர்ந்தவன் பக்கம் பூண்டவே - நான்கு குதிரைகள் உயிர்களின் ஒப்பற்ற உள்ளத்தின் தன்மையை உணரவல்லவனாகிய இராம பிரானுடைய தேரில் பூட்டப்பெற்றுள்ளன.
பாலமை: பான்மை: தன்மை. அறம், பொருள், இன்பம், வீடு எனும் புருடார்த்தங்கள் நான்கின் பயிற்சியும் உயர்நிலை எய்தும் ஆன்மக் கூட்டத்திற்கு இலக்கையடைய உதவுவதுபோல, உரிய இலக்கை எளிதில் அடைய பயிற்சிமிக்க இக்குதிரைகள் நான்கும் உதவும் என்பதாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Having the marks laid down in the treatises, with a strength to be closely judged,
- full of great beauty, like the four
- beginning with dharma, were the four horses
- yoked to the chariot of him who knows the nature of every being.
What the poem says
Four horses draw Irāmaṉ's chariot. They have every mark of excellence listed in the treatises on horses, their strength stands up to the closest scrutiny, and they are very handsome.
The poet likens them to the four aims of human life: dharma, wealth, pleasure and liberation. Everyone longs to attain those four, just as everyone would long to own these horses, and just as the four aims carry a soul to its goal, these well-trained horses carry their master swiftly to his. The one they draw is Irāmaṉ, who understands the inner nature of every creature.