கம்பராமாயணம் 1309 · பால 21.76

Section பால காண்டம் / 21. கடிமணப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1சொரிந்தனர் மலர் மழை சுண்ணம் தூவினர்
விரிந்து ஒளிர் காசு பொன் தூசு வீசினர்
பரிந்தனர் அழகினைப் பருகினார் கொல் ஆம்
தெரிந்திலர் திருநகர் மகளிர் செய்கையே.

பொருள் · Meaning in Tamil

மலர் மழை பொழிந்தனர் சுண்ணம் தூவினர் - (அந் நகரத்து மகளிர் எல்லோரும்) (இராம பிரானின் மீது) பூ மழை பொழிந்தனர்; நறுமணப் பொடிகளைத் தூவினர்; விரிந்து ஒளிர் காசு, பொன், தூசு வீசினர் - ஒளி பரவி மிளிர்கின்ற இரத்தினங்களையும் பொன்னையும், ஆடைகளையும் (யாவர்க்கும் மகிழ்ச்சி மிகுதியால்) அள்ளி வீசினர்; பரிந்தனர், அழகினைப் பருகினார் கொலோ? - (இதற்குக் காரணம்) இராமபிரானது பேரழகை விரும்பிக் குடித்தார்கள் போலும்!; திருநகர் மகளிர் செய்கை தெரிந்திலம் - அழகு மிகும் அந்நகரத்து மகளிர் செயல்கட்கு (இதனை விட வேறு காரணம் எதுவும்) எமக்குத் தெரியவில்லை.

இராமனது பேரழகுப் பெருங்காட்சி கண்டு பிறர்க்கு மணியும் பொன்னும் ஆடையுமாக அள்ளிக் கொடுத்தனர் என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They poured down showers of flowers, they scattered scented powder,
  2. they flung out gems spreading their light, and gold, and cloth;
  3. was it that, longing, they had drunk in his beauty?
  4. We do not understand what the women of that fine city did.

What the poem says

The women of Mitilai shower Irāmaṉ with flowers and fragrant powder, and in their excitement they throw gems, gold and fine cloth to anyone nearby.

The poet pretends to be puzzled by such extravagance. Perhaps they had drunk so deeply of Irāmaṉ's beauty that they were intoxicated; he can think of no other explanation.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1corintaṉar malar maḻai cuṇṇam tūviṉar
virintu oḷir kācu poṉ tūcu vīciṉar
parintaṉar aḻakiṉaip parukiṉārkolō
terintilam tirunakar makaḷir ceykaiyē.