கம்பராமாயணம் 1311 · பால 21.78

Section பால காண்டம் / 21. கடிமணப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எஞ்சல் இல் உலகத்து உள்ள - யாரும் எஞ்சாமல் உலகம் முழுவதும் உள்ள; எறிபடை அரச வெள்ளம் - வீசுகின்ற ஆயுதங்களை ஏந்திய அரசர்களின் மிகுதியான கூட்டம்; குஞ்சரக் குழாத்தின் சுற்ற - யானைகளின் கூட்டம் போல் சுற்றிலும் நிற்க; கொற்றவன் இருந்த கூடம் - தசரதச் சக்கரவர்த்தி வீற்றிருந்த அந்தத் திருமண மண்டபத்தை; வெம்சினத் தனுவலானும் - கொடுங் கோபமுடைய வில் தொழிலில் வல்லவனான இராமபிரானும்; மேருமால் வரையில் சேரும் செஞ்சுடர்க் கடவுள் என்ன - மேரு என்னும் பெரிய மலையைப் போய்ச் சேருகிற சிவந்த கதிர்களையுடைய சூரியனைப் போல; தேரிடைச் சென்று சேர்ந்தான் - தேரின் மேலே சென்று சேர்ந்தான்.

மேரு மாமலை, அந்த மண மண்டபத்திற்கும், அம்மலையடைந்த சூரியன் இராமபிரானுக்கும் உவமைகள் ஆயின. அரசர்களை யானைக் கூட்டமென்றார், தசரதனைச் சிங்க ஏறு என்றற்கு. இராமன், வில் ஒன்றைத் தவிர, வேறு ஆயுதங்கள் எவையும் ஏந்தாத வில்வலான் ஆதலின், “வெஞ்சினத் தனுவலான்” என்று ஒரு பெயர் ஈந்தார். திருக்கோவில் படிவங்களிலும் கையும் வில்லுமாகவே இராமபிரானின் திருவுருவங்கள் காட்சி நல்குவதும் காணலாகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. To the hall where the victorious king sat, ringed like a herd of elephants
  2. by the flood of weapon-hurling kings from every land of the world, none missing,
  3. the master of the fierce, wrathful bow went in his chariot and arrived,
  4. like the god of red rays reaching the great mountain Mēru.

What the poem says

Irāmaṉ arrives at the wedding hall in his chariot. Inside, Tacarataṉ sits surrounded by armed kings from every corner of the earth, who crowd round him like a herd of elephants; by implication he is the lion among them.

Irāmaṉ entering the golden hall is like the sun arriving at Mount Mēru. He is called 'master of the fierce bow' because the bow is the one weapon he carries, and temple images show him with bow in hand.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eñcal il ulakattu uḷḷa eṟi paṭai araca veḷḷam,
kuñcarak kuḻāttiṉ cuṟṟak koṟṟavaṉ irunta kūṭam
veñ ciṉat taṉuvalāṉum, mēru māl varaiyil cērum
ceñ cuṭark kaṭavuḷ eṉṉat tēriṭaic ceṉṟu cērntāṉ.