கம்பராமாயணம் 1316 · பால 21.83
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அழகு காண - இராமன் சீதை இருவரின் மணக் கோல அழகு காண; அந்தரம் இந்திரன் சசியொடும் எய்தினான் - வான்வெளியில் தேவேந்திரன் தன் மனைவி சசிதேவியுடன் வந்து அடைந்தான்; இளஞ் சந்திர மௌலியும் தையலாளொடும் வந்தனன் - இளம்பிறையைச் சூடிய சிவபெருமானும் உமையாளொடும் வந்தடைந்தான்; மலர் அயன் வாக்கினாளுடன் புகுந்தனன் - தாமரையில் வாழ்கின்ற நான்முகனும் கலைமகளொடு வந்தடைந்தான்.
இரு திறத்தார்க்கும் செய்த வரம்பு இவர் இருவர் ஆதலின் இருவரின் பேரழகுப் பெருக்கினைச் சுட்ட வானத்துத் தேவர்தலைவர்கள் மணங்காண வந்தனர் என்னாது, “அழகு காண” வந்தனர் என்றார். மணக்கோல அழகு நெஞ்சில் நிற்கும் அழகு ஆதலின் “மணவணி காண மகிழ்ந்தனர்” (சிலம்பு. ) என்பார் இளங்கோவடிகளும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Intiraṉ came with Caci; he who wears the young
- moon on his crown came with his lady;
- Ayaṉ of the flower came with the goddess of speech;
- they entered the sky to see the beauty.
What the poem says
The great gods arrive in the sky above the hall with their consorts: Indra with Śacī, Śiva, who wears the crescent moon in his hair, with Umā, and Brahmā of the lotus with Sarasvatī, goddess of speech.
The poet does not say they came to see the wedding but to see the beauty, since Irāmaṉ and Cītai are the very pattern of beauty for men and women alike.