கம்பராமாயணம் 1320 · பால 21.87

Section பால காண்டம் / 21. கடிமணப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கோமகன் முன் சனகன் - (தசரதச் சக்கரவர்த்தித் திருமகனான) இராமனின் எதிர்நின்று சனக மன்னன்; “நீ பொருளும் பூ மகளும் என என் மாமகள் தன்னொடும் மன்னுதி” என்னா - “நீ (பரம்) பொருளாகிய திருமாலும், தாமரையில் வாழும் திருமகளும் போல என்னுடைய பெருமைக்குரிய திருமகளான சீதையுடனே நிலைபெற்று வாழ்க” என்று கூறி; குளிர் நல் நீர் தாமரை அன்ன தடக்கையின் ஈந்தான் - குளிர்ந்த தூய நீரைத் (தாரை வார்த்து) தாமரை மலர் போன்ற (இராமனது) வலத் திருக்கையில் கொடுத்தான்.

“பூ மகளும் பொருளும்” போல எனற்கு, பூமித் தாயும் அவளிடத்துள்ள பொருளும் போல எனவும், திருமகள் செல்லுமிடம் எல்லாம் செல்லும் செல்வம் போல எனவும் பொருள் கொள்ளலுமாம். பூமகள்: அலர்மேல் மங்கையாகிய திருமகள். “அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கையுறை மார்பன்” (திருவாய். 0:10:10) ஆதலின் “பரம் பொருளும் பூமகளும் என மன்னு” என்றான். பொருளில் சிறந்த பொருள் இறைவனே ஆதலின் அடையின்றிப் “பொருளும்” என்றார். அடையின்மை சிறப்பைக் குறித்தலைத் திருக்கோவையார் முதற்பாடலில் பேராசிரியர் குறித்த உரையால் அறிக.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Before the prince, Caṉakaṉ, with cool, pure water,
  2. saying, 'Like the lady of the flower and the Supreme,
  3. may you live on with my great daughter,'
  4. gave her into his broad hand, which is like a lotus.

What the poem says

The central rite of the wedding. Caṉakaṉ stands before Irāmaṉ and gives his daughter away by pouring cool, pure water into the groom's lotus-like right hand, the gesture that seals the gift of a bride.

His blessing is that Irāmaṉ and Cītai live together for ever like Lakṣmī and Viṣṇu, called simply 'the Supreme' because he is the highest of all beings. The commentary also mentions other readings: like Mother Earth and the wealth she holds, or like Fortune and the riches that follow her wherever she goes.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kōmakaṉ muṉ caṉakaṉ kuḷir nal nīr
pūmakaḷum poruḷum eṉa nī eṉ
mā makaḷ taṉṉoṭum maṉṉuti eṉṉā
tāmarai aṉṉa taṭak kaiyiṉ īntāṉ.