கம்பராமாயணம் 1322 · பால 21.89

Section பால காண்டம் / 21. கடிமணப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வானவர் பூமழை - வானத்துத் தேவர் பொழிந்த (கற்பக) மலர் மாரியும்; மன்னவர் பொன் பூ - மண்ணகத்து மன்னர்கள் பொழிந்த பொன்னால் ஆகிய பூக்களும்; ஏனையர் தூவும் இலங்கு ஒளி முத்தம் - மற்றையோர் பொழிந்த விளங்கும் ஒளி முத்துக்களும்; தான் நகு நாள் மலர் - தானாக மலர்ந்த பூக்களும்; என்று இவை தம்மால் - என்று (கூறப்படும்) இவற்றால்; இப்பார் மீன் நகுவானின் விளங்கியது - இம் மண்ணுலகம் (அன்று) மீன்கள் ஒளிர்கின்ற வான் உலகம் போல விளங்கியது.

“என்ற” எனும் பெயர் எச்சத்தின் அகரம் தொக்கு “என்று” என நின்றது. பெருமான், பிராட்டி திருமணத்தன்று, மண்ணுலகம் விண்ணுலகமாயிலங்கியது எனக் கூறக் கருதிய கவிஞர்பிரான் அன்று சொரிந்த பொருள்களை வைத்தே தன் நினைப்பை முடித்துக் காட்டினார். பூக்களும் பொன்னும் முத்தும் எங்கும் மொய்த்துக் கிடந்து மண்ணகத்தை வானகமாக்கிற்று என்பதாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The rain of flowers from the gods, the golden flowers from the kings,
  2. the shining pearls that the others scattered,
  3. and the fresh blossoms that opened of themselves: with all these
  4. this earth shone like the sky smiling with stars.

What the poem says

Showers fall on the couple: heavenly flowers from the gods, flowers made of gold from the kings, gleaming pearls from everyone else, and fresh flowers that bloomed of their own accord.

The ground is so thickly strewn with them, glittering everywhere, that the earth looks like the night sky full of stars. The poet makes the point that on this wedding day earth became heaven simply by describing what was showered down.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vāṉavar pū maḻai maṉṉavar poṉ pū
ēṉaiyar tūvum ilaṅku oḷi muttam
tāṉ naku nāḷmalar eṉṟu ivaitammāl
mīṉ naku vāṉiṉ viḷaṅkiyatu ip pār.