கம்பராமாயணம் 1323 · பால 21.90

Section பால காண்டம் / 21. கடிமணப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வெய்ய கனல் தலை வீரனும் அந்நாள்
மை அறு மந்திரம் முற்றும் வழங்கா
நெய் அமை ஆவுதி யாவையும் நேர்ந்தான்
தையல் தளிர் கை தடக்கை பிடித்தான்.

பொருள் · Meaning in Tamil

வீரனும் அந்நாள் - மாவீரனாகிய இராமபிரான் அப்பொழுது; மையறு மந்திரம் மும்மை வழங்கா - குற்றமற்ற மந்திரங்களை மும் முறை கூறி; வெய்ய கனல் தலை - வெம்மை மிக்க தீயின்கண்; நெய் அமை ஆவுதி யாவையும் நேர்ந்தான் - நெய்யோடு கூடிய அவியுணவுள் யாவற்றையும் பெய்தான். (அதன்பின்); தையல் தளிர்க்கை தடக்கை பிடித்தான் - அழகிய சீதையினுடைய தளிர் அனைய மெல்லிய கரத்தினைத் தனது அகன்ற திருக்கரத்தாற் பற்றினான்.

மும்மை வழங்குதல் என்பது மந்திரத்தை உச்சரித்து நெய்யை மும்முறை மண்ணுதல் என்பர். “நெய்யை முனை முதிர் தருப்பை தன்னால் மந்திரத்து அமைய முக்கால் மண்ணி” (சீவக. 2405) எனும் தேவர் அடிகளும் அவற்றிற்கு நச்சர் உரையும் காண்க. இனி, அறம் தளிர்ப்பதற்கு ஆவனவெல்லாம் புரிய உள்ள கை எனும் பொருளும் தோன்ற, “தையல் தளிர்க்கை தடக்கை பிடித்தான்” என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Into the hot fire the hero, on that day,
  2. speaking the flawless mantras three times,
  3. offered all the oblations made with ghee,
  4. and took the lady's tender-leaf hand in his broad hand.

What the poem says

Irāmaṉ now performs his part of the fire ritual. Reciting the sacred mantras three times, he pours all the oblations of ghee into the fire. Then he takes Cītai's soft hand, tender as a young leaf, in his own broad hand: the rite of pāṇigrahaṇa, the taking of the bride's hand.

The commentary hears a second meaning in 'tender-leaf hand': the hand that will help dharma put out new shoots.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1veyya kaṉaltalai vīraṉum an nāḷ
mai aṟu mantiram mummai vaḻaṅkā
ney amai āvuti yāvaiyum nērntāṉ
taiyal taḷirk kai taṭak kai piṭittāṉ.