கம்பராமாயணம் 1333 · பால 21.100

Section பால காண்டம் / 21. கடிமணப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பங்குனி உத்தரம் ஆன பகல் போது
அங்கண் இருக்கினில் ஆயிரம் நாமச்
சிங்கம் மணத் தொழில் செய்த திறத்தால்
மங்கல அங்கி வசிட்டன் வளர்த்தான்.

பொருள் · Meaning in Tamil

பங்குனி உத்தரம் ஆன பகல்போது - பங்குனி மாதத்து உத்திர நட்சத்திரம் கூடியுள்ள பகற் பொழுதிலே; ஆயிர நாமச் சிங்க மணத்தொழில் செய்த திறத்தால் - ஆயிரந்திருப்பெயர்களையுடைய சிங்கமே போன்ற இராமனது திருமணச் சடங்குகளைச் செய்து முடித்ததிறங்கூடிய; வசிட்டன் - வசிட்ட மாமுனிவன்; அங்க இருக்கினில் மங்கல அங்கி வளர்த்தான் - உப அங்கங்களையுடைய, வேதவிதிப்படி, மங்கலகரமான ஓமாக்கினியை வளர்த்தான்.

“தாள்கள் ஆயிரத்தாய் பேர்கள் ஆயிரத்தாய்” (திருவாய். 8. 1.10) என்பவாதலின் ஆயிர நாமச் சிங்கம் என்றார். உத்திர நாளோடு கூடிய பௌர்ணமியன்று திருமணம் நிகழ்ந்து முடிந்தபின் மணவேள்வியைத் தொடங்கிய வசிட்டபகவானே அதனை மங்கலமாக முடித்து வைத்தான் என்க. இராம நாமம் ஒன்றே, திருமாலின் ஆயிரம் நாமங்கட்கும் சமம் என்பது சகச்சிர நாமத்தின் இறுதித் துதியாதலால், “ஆயிர நாமச்சிங்கம்” என்றார் எனினுமாம்.

மங்கல அங்கி வளர்த்தல் - வேள்வியில் மங்களகரமாக ஓமத்தீப் பொங்கியெழுமாறு பூரணாகுதி வழங்கல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. In the daytime, when it was Uttaram in Paṅkuṉi,
  2. by the Rig Veda with its limbs, having carried out the wedding rites
  3. of the lion with a thousand names,
  4. Vacittaṉ tended the auspicious fire.

What the poem says

The date and the closing rite. The wedding took place by day under the Uttaram asterism in the month of Paṅkuṉi, on the full moon. Vacittaṉ, who conducted the ceremonies for Irāmaṉ, now completes them by feeding the auspicious fire with the final full offering, following the Veda and its auxiliary texts.

Irāmaṉ is called 'the lion with a thousand names', since Viṣṇu is praised under a thousand names; the commentary adds the tradition that the single name Rāma equals all thousand.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paṅkuṉi uttaram āṉa pakaṟpōtu
aṅka irukkiṉil āyira nāmac
ciṅkam maṇat toḻil ceyta tiṟattāl
maṅkala aṅki vaciṭṭaṉ vakuttāṉ.