கம்பராமாயணம் 1334 · பால 21.101
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
எள்ளல் இல் கொற்றவன் - பழிப்பில்லாத வெற்றிகளையே கொண்ட சனகன்; எம்பி அளித்த அள்ளல் மலர்திரு அன்னவர்தம்மை - என்பின் பிறந்தவனான தம்பி (குசத்துவசன்) பெற்ற, சேற்றில் மலரும் செந்தாமரையில் வாழும் திருமகள் அனைய மகளிரையும்; கொள்ளும் என - மணஞ்செய்து கொள்ளுங்கள் என்று; வள்ளல் தனக்கு இளையோர்கள் தமக்கும் - வரையாது அருளும் இராமபிரானது தம்பியராகிய, பரத இலக்குவ, சத்துருக்கனர்க்கும்; தமரோடு குறித்தான் - (தசரத சக்கரவர்த்தி முதலிய) உறவினர்களோடு மணம் பேச நிச்சயித்தான்.
சீதையை வளர்த்தபின் சனகனுக்குப்பிறந்த பெண் ஆகிய ஊர்மிளையை இலக்குவனுக்கும், தம்பி மகளிராகிய மாண்டவியைப் பரதனுக்கும் சுருதகீர்த்தியைச் சத்துருக்கனனுக்கும் நிச்சயித்தனர் என்பது முதனூலால் பெறப்படும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- For the younger brothers of the bountiful one, too,
- the blameless victorious king, saying, 'Take
- the girls my brother has given, like Tiru of the mud-grown lotus,'
- settled it with his kinsmen.
What the poem says
Now the other three brothers are to be married. Caṉakaṉ, the king whose victories are beyond reproach, consults Tacarataṉ and the rest of the family and proposes that Irāmaṉ's younger brothers marry the girls of his house, each as lovely as Lakṣmī on her lotus.
The commentary fills in the names from Vālmīki: Ūrmiḷai, Caṉakaṉ's own daughter born after Cītai, for Ilakkuvaṉ, and the two daughters of his brother Kucattuvacaṉ, Māṇṭavi for Paratan and Srutakīrtti for Catturukkaṉ.