கம்பராமாயணம் 1335 · பால 21.102
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கொய்ந்நிறை தாரன் - மலர்களைக்கொய்து தொடுத்து நிறைந்த மாலைகளையணிந்த மார்பினனாகிய சனகனும்; குசத்துவசப்பேர் நெய்ந்நிறை வேலவன் - குசத்துவசன் என்னும் பெயரையுடைய நெய்நிறையப் பூசப்பெற்றுள்ள வேல் ஏந்திய சனகனின் தம்பியும் ஆகிய இருவரின்; மங்கையர் நேர்ந்தார் - மகளிர் மூவரும் திருமணத்திற்குப் பொருந்தியவர் ஆயினர்; மைந்நிறை கண்ணியர் - மை நிறைந்த கண்களை யுடையவரும்; வான்உறை நீரார் - வான மகளிரின் தன்மையையுடையவரும்; மெய்ந்நிறை மூவரை - பருவம் நிரம்பினவரும் ஆகிய அம்மூவரையும்; மூவரும் வேட்டார் - (இராம பிரானின் தம்பியராகிய) மூவரும் மணஞ்செய்து கொண்டனர்.
மெய் - ஆகு பெயராய்ப் பருவத்தைக்குறித்தது. சத்திய ஒழுக்கத்தையும், நிறையென்னும் பெண்மை ஒழுக்கத்தையும் கொண்ட மகளிர் என்று “மெய்ந்நிறை மூவர்” எனுந்தொடர்க்குப் பொருள் கொள்ளினும் அமையும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The daughters of the king with the full, freshly plucked garland
- and of the one named Kucattuvacaṉ, with his spear rubbed full of ghee, were given;
- the three with kohl-filled eyes, like the women who dwell in heaven,
- grown to full womanhood, the three brothers married.
What the poem says
The three girls are given in marriage: the daughter of Caṉakaṉ, the king with the full garland, and the daughters of his brother Kucattuvacaṉ, whose spear is kept oiled with ghee. With their kohl-darkened eyes they are as lovely as goddesses, and they have come of age.
The three younger brothers marry them. The commentary offers a second reading of 'full in body': full of truthfulness and the steadfast virtue proper to women.