கம்பராமாயணம் 1337 · பால 21.104
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வேந்தனும் - தசரதச்சக்கரவர்த்தியும்; ஈந்து அளவு இல்லது ஒர் இன்பம் நுகர்ந்தான் - (சனகனைப்போலவே) கொடை கொடுத்து, அதனால் வரும் எல்லையற்றதும் ஒப்பற்றதும் ஆகிய இன்பத்தை நுகர்ந்து; ஆய்ந்து உணர் கேள்வி அருந்தவரோடும் - ஆராய்ந்து உணரும் கேள்விச் செல்வத்தையும், அரிய தவச்செல்வத்தையும் உடைய முனிவர்களுடனே (அளாவி மகிழ்ந்து); அந்நகர் வைகினன் - அந்த மிதிலை நகரத்திலே தங்கியிருந்தனன்; நாள் சில மெள்ளத் தேய்ந்தன - சில நாட்கள் மெல்லக் கழிந்தன; செய்தது உரைப்பாம் - அதன்பின்பு நிகழ்ந்ததை (இனிமேல் வரும் படலத்தில்) கூறுவோம். ஒன்றைக்கொடுத்து, அக்கொடையால், பெறுவார் பெறும்இன்பத்தைக் கண்டு தாம் மகிழும் இன்பத்திற்கு ஈடான இன்பம் உலகில் இல்லையாதலின், “ஈந்து, அளவில்லதோர் இன்பம் நுகர்ந்து” என்றார். “ஈந்து உவக்கும் இன்பம்” (திருக். 228) எனும் அருமைக்குறளும் அதற்குப் பரிமேலழகர் வரைந்த உரையும் இங்கு நோக்கத் தகுவன. கேள்விச் செல்வம் மிக்க தவ முனிவரோடு தத்துவச் செல்வங்களை ஆய்ந்து நாள் போவது தெரியாமல் சம்பந்தியாகிய சனகன் நகரில் தசரதன் தங்கியிருந்தான் என்பார், “மெள்ளத் தேய்ந்தன நாள் சில” என்றார். தன் நகரம் செல்வதைக் கூட மறக்கச்செய்தது கலைவல்ல முனிவர்களிடம் கேட்ட கேள்விச் செல்வம் என்பது குறிப்பு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Having given, he tasted a joy beyond measure;
- with the rare ascetics of searching, discerning learning,
- the king too stayed on in that city; slowly
- a few days wore away. What he did then, we shall tell.
What the poem says
Tacarataṉ too gives generously and tastes the boundless joy of giving; as Tirukkuṟaḷ says, there is no pleasure like the pleasure of seeing others made happy by one's gifts. He stays on in Mitilai, the city of his new kinsman, discussing philosophy with the learned sages, and the days slip quietly by.
This is the last verse of the wedding chapter. The poet promises to tell what happened next, which is the subject of the following chapter, the meeting with Paracurāmaṉ.