கம்பராமாயணம் 1339 · பால 22.2

Section பால காண்டம் / 22. பரசுராமப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அப்போதினில் - அந்நாள்களில் ஒரு நாளில்; முடி மன்னவன் - மகுடம் அணிந்த தசரதச் சக்கரவர்த்தி; அணிமா நகர் செலவே - அழகிய மாநகராகிய அயோத்திக்குச் செல்ல; இப்போது நம் அனிகம்தனை எழுக - இப்பொழுது, நம் சேனைகள் யாவும் (நம்முடன்) புறப்படுக; என்று இனிது இசையா - என்று இனிமையுடன் கூறி; கைப் போதகம் நிகர்காவலர் குழு - (சனகனிடம் விடைபெற்று) துதிக்கைகளையுடைய யானைகளைப் போன்ற அரசர்களின் கூட்டம், அடிகதுவ - தனது பாதங்களை வணங்கி நெருங்கிச் சூழ்ந்து வர; ஒப்பு ஓத அரு தேர் மீதினில் - உவமை கூறற்கு அரிய (அழகிய தன்) தேரின்மேல்; உரவோன் இனிது ஏறினன் - வலிமை மிக்கோனாய், நெஞ்சு இனிக்க ஏறினான். இராமனின் திருமணம், தசரத வேந்தனுக்குப் புதிய ஆற்றலையும், பெருமகிழ்வையும் தந்து நெஞ்சினிக்க வைத்த நிகழ்ச்சியொன்று ஆதலின், அந்த இனிமை நிகழ்வினை நெஞ்சில் சுமந்தவாறு அயோத்தி புறப்படத் தேர் ஏறினான் என்பார், “தேர்மீதினில் உரவோன் இனிது ஏறினான்” என்றார். இசையா - இசைத்து. செய்யா எனும் வினையெச்சம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. At that time the crowned king, to go to his beautiful great city,
  2. gently gave the word: 'Let our army set out now,'
  3. and with a troop of guardian kings like elephants with trunks pressing round his feet,
  4. the mighty one gladly mounted his chariot, which nothing can be compared to.

What the poem says

Some days later Tacarataṉ decides it is time to go home to Ayōtti. He tells his army to get ready and, after taking leave of Caṉakaṉ, climbs into his matchless chariot while the vassal kings, strong as elephants, crowd round to bow at his feet.

He mounts the chariot 'gladly': the commentary explains that his son's wedding has given the old king new strength and great happiness, and he carries that sweetness in his heart as he sets off.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ap pōtiṉil muṭi maṉṉavaṉ aṇi mā nakar celavē,
'ippōtu nam aṉikamtaṉai eḻuka' eṉṟu iṉitu icaiyā,
kaip pōtakam nikar kāvalar kuḻu vantu aṭi katuva,
oppu ōtu aru tēr mītiṉil iṉitu ēṟiṉaṉ uravōṉ.