கம்பராமாயணம் 1351 · பால 22.14

Section பால காண்டம் / 22. பரசுராமப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கமை ஒப்பது ஒர் தவமும், சுடு கனல் ஒப்பது ஒர் சினமும்,
சமையப் பெரிது உடையான் எதிர் தள்ளுற்று, இடை தளரும்
அமையம் அத்து, உயர் பறவைக்கு இனிது ஆறு ஆம் வகை சீறாச்
சிமையக் கிரி உருவத் தனி வடி வாளிகள் தெரிவான்.

பொருள் · Meaning in Tamil

கமை ஒப்பது ஒர்தவமும் - பொறுமை என்னும் குணமே (வடிவு பெற்றது) எனலாம் படியான தவத்தையும், சுடுகனல் ஒப்பது ஒர் சினமும் - சுடுகின்ற தீயே (வடிவு பெற்றது) எனலாம் படியான சீற்றத்தையும்; பெரிதும் சமைய உடையான் - மிகவும் பொருந்தியிருப்பவனும்; எதிர் தளர்வுற்று இடை தவிரும் அமையத்து - (மானச வாவிக்குச் செல்லுகையில்) எதிரே (பறக்கும் வழியை) இடையே தவற விட்டுத் தளர்ந்த போது; உயர் பறவைக்கு - உயர்ந்த (அன்னப்) பறவைகட்கு; இனிது ஆறு ஆம் வகை - இனிய வழியாகும்படி; சீறா - சீற்றம் கொண்டு; சிமையக் கிரி உருவ - சிகரத்தையுடைய (கிரௌஞ்ச) மலையைத் துளைத்து ஊடுருவிச் செல்லுமாறு; தனி வடிவாளிகள் - ஒப்பற்ற கூரிய அம்புகளைத்; தெரிவான் - தெரிந்து ஏவ வல்லானும் -

பரசுராமனும் முருகப் பெருமானும், சிவ பிரானிடம் வில்வித்தை பயின்று முடித்த பின்பு, ஆற்றல் அறிய, கிரௌஞ்ச கிரியின் சிகரமொன்றைத் துளைக்குமாறு, சிவபெருமான் ஆணையிட, முருகன் தயங்குகையில், பரசுராமன் தயங்காது கணையைச் செலுத்தி, அச்சிகரத்தைத் துளைக்க, பருவ மாற்றங்களில் இடம் மாறும் அன்னம் முதலிய பறவைகள் செல்வதற்கு, இவன் சிகரந் துளைத்த வழி மிகவும் உதவிற்று என்னும் கதையை உட்கொண்டது பின் இரண்டடியில் உள்ள கருத்து ஆகும். இவன் தவம் புரிவது பொறுமைக்குணமே தவம் புரிவது போலிருந்தது என்பார், கமை ஒப்ப தோர்தவமும் என்றார். கமை - பொறை. வெகுண்டால் தீப்போல் வெகுள்வான்; பொறுத்தால் பொறையே ஆவான் என இவன் இருகுணங்களின் எல்லையாகவே இருந்தமை குறிப்பித்தவாறு. பரசுராமன் கிரௌஞ்ச கிரியைத் துளைத்து, பறவைகட்கு வழியமைத்த அரிய செய்தி முதல் நூலாம் வான்மீகத்தில் இல்லை என்பர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He had a penance like patience itself and an anger like scorching fire,
  2. both to the full; when the birds were thrown off their path and faltered midway,
  3. in that hour, so that the high-flying birds might have an easy road, he raged
  4. and chose matchless keen arrows to pierce right through the peaked mountain;

What the poem says

The portrait adds his two extremes: in penance he is patience itself, in anger he is fire.

The second half alludes to a story that, the commentary notes, is not in Vālmīki. Paracurāmaṉ and Murukaṉ learned archery from Civaṉ, who told them to pierce a peak of the Krauñca mountain as a test. Murukaṉ hesitated; Paracurāmaṉ shot at once and bored through it, and the gap became a pass for swans and other birds that migrate with the seasons.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kamai oppatu or tavamum, cuṭu kaṉal oppatu or ciṉamum,
camaiyap peritu uṭaiyāṉ neṟi taḷḷuṟṟu, iṭai taḷarum
amaiyattu, uyar paṟavaikku iṉitu ām vakai cīṟā
cimaiyak kiri uruvat taṉi vaṭi vāḷikaḷ terivāṉ.