கம்பராமாயணம் 1379 · பால 22.42

Section பால காண்டம் / 22. பரசுராமப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வெளிப்படும் உணர்வினன் - (முன்பு துயரால் அழிந்து போன) புலன் உணர்வுகள் யாவும் வெளிப்பட்டவன் ஆகி; விழுமம் நீங்கி - துன்பங்கள் நீங்கி; தளிர்ப்பு உற - மனம் தழைக்கின்ற; மத கரித் தானையான் - மதம் மிக்க யானைச் சேனையான் ஆகிய தசரதன்; இடை குளிப்பு அரும் - இடையிலே மூழ்குவதற்கு அரியதான; துயர்க் கடல் கோடு கண்டவன் - துன்பமாகிற பெருங்கடலின் எல்லையைக் கண்டுணர்ந்தவன்; களிப்பு எனும் - (பின்பு) களிப்பு என்கின்ற; கரை இலாக் கடலுள் ஆழ்ந்தனன் - கரை காணாத கடலிடையே மூழ்கினான்.

“வெளிப்படும் உணர்வினன்” என்பதற்கு துயரத்தால் உடலை விட்டுப் புறப்பட்டுக் கொண்டிருந்த உயிரின் உணர்வுடையவன் எனினுமாம். பரசுராமனால், தன் அருமை இராமனுக்கு நேருவதைக் காணச் சகியாது துன்பக் கடலுள் மூழ்கி மறைந்தான். தன் மகன் பெற்ற வெற்றியைக் காண இராமன் கரையேற்ற சென்ற பாடலில் கரை ஏறிய தசரதன், இப்பாடலுள், மீண்டும் மூழ்கினான் எனும் நயம் தோன்றக் கூறினார். அந்தத் துயரக் கடல், இராமனால் மீட்கப் பட்டதால் கரையுளது ஆயிற்று; இந்த இன்பக் கடல் இராமனாலும் கரையேற்ற இயலாதது என்பார், “கரை இலாக் கடலுள் ஆழ்ந்தனன்” என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. His senses returning, his anguish gone,
  2. the king of the army of rutting elephants, flourishing once more,
  3. having found the far shore of a sea of sorrow too deep to plunge through,
  4. now sank into a sea of joy that has no shore.

What the poem says

Tacarataṉ revives. The poet plays on the sea of the previous verse: Irāmaṉ has just pulled his father ashore from the sea of grief, and at once the king sinks again, this time into a sea of joy at his son's victory.

The sea of grief had a shore, since Irāmaṉ could lead him out of it; the sea of joy has none, and not even Irāmaṉ can bring him out of that.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1veḷippaṭum uṇarviṉaṉ, viḻumam nīṅkiyē,
taḷirppu uṟu mata karit tāṉaiyāṉ, iṭaik
kuḷippu arun tuyark kaṭaṟ kōṭu kaṇṭavaṉ,
kaḷippu eṉum karai ilāk kaṭaluḷ āḻntaṉaṉ.