கம்பராமாயணம் 1386 · பால 22.49

Section பால காண்டம் / 22. பரசுராமப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1உளை விரி புரவித் தேர் உதாசித்து என்று எணும்
வளை முரல் தானையான் மருங்கு போதப் போய்,
இளையவன் தன்னொடும் ஏழு நாள் இடை,
நளிர் புனல் கேகயநாடு நண்ணினான்.

பொருள் · Meaning in Tamil

உளை விரி புரவித் தேர் - பிடரி மயிர்கள் பரந்த குதிரைகள் பூட்டிய தேரில்; உதாசித்து எனும் - உதாசித்து என்று சிறப்பிக்கப்படுகிற; வளைமுரல் தானையான் - சங்குகள் முழங்கும் சேனைக் குடையவன்; மருங்கு போத - தன் அருகில் வர; இளையவன் தன்னொடும் போய் - தன் தம்பியான சத்துருக்கனனோடும் சென்று; ஏழு நாளிடை நளிர்புனல் கேகய நாடு நண்ணினான் - ஏழு நாட்களிலே தண்ணிய நீர்வளம் மிக்க கேகய நாட்டையடைந்தான் (பரதன்).

அழைப்பு, பரதனுக்கேயாயினும் சத்துருக்கனனும் அழையாமலேயே உடன் சென்றது, அடியார்க்கு அடியன் ஆகும், சத்துருக்கனனின் திறம் உணர்த்தும். பரதனும் சத்துருக்கனனும் வடிவும் நிழலும் போல்வர். ஆதலின் பரதனுடன் பிரியாமற் செல்லல் சத்துருக்கனனுக்கு நேர்ந்தது. இருவரும் இணை பிரியாதவர் என்பதனை, “பரதனும் இளவலும் ஒரு நொடி பகிரா வரதனும் இளவலும் என மருவினரே” (கம்ப. 307) என முன்னும் உரைத்தார். இலக்குவன் “பகவானுக்கு அடிமை” எனும் பண்புச் சிறப்பை விளக்கவும், சத்துருக்கனன், “பாகவதர்க்கு அடிமை” எனும் பண்புச் சிறப்பினை விளக்கவும் படைக்கப்பட்ட பாத்திரங்கள் எனவும் பிரபந்தப் பேருரையாளர்கள் விளக்குவர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With Utācittu, of the chariot drawn by horses with spreading manes,
  2. whose army resounds with conches, going at his side, he set out
  3. with his younger brother, and within seven days
  4. reached the land of Kēkayam with its cool waters.

What the poem says

Paratan travels to his grandfather's kingdom escorted by his uncle Utācittu (Yudhājit), and his younger brother Catturukkaṉaṉ goes too, though only Paratan was invited. The two are as inseparable as a body and its shadow.

Commentators on the Vaiṣṇava hymns say that Ilakkuvaṉ embodies service to God and Catturukkaṉaṉ embodies service to God's devotees: he serves Paratan as Ilakkuvaṉ serves Irāmaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uḷai viri puravit tēr utācittu eṉum
vaḷai mural tāṉaiyāṉ maruṅku pōtap pōy,
iḷaiyavaṉ taṉṉoṭum ēḻu nāḷiṭai,
naḷir puṉal kēkaya nāṭu naṇṇiṉāṉ.