கம்பராமாயணம் 1392 · அயோத்தியா 1.5
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
குலம் முதல் தொன்மையும் - குடிப்பிறப்பினது முதன்மையான பழமையும்; கலையின் குப்பையும் - கலை அறிவுகளின் தொகுதியையும்; பல முதல் கேள்வியும் - பல சிறந்த கேள்வியறிவையும்; பயனும் - அவற்றால் உளதாகும் பயனையும்; எய்தினார் - பெற்றவர்கள்; நலம் முதல் நலியினும் - தமக்கு வரும்நலன்கள் வேரோடு கெடுவதாயினும்; நடுவு நோக்குவார் - நடுவு நிலைமையையே காப்பவர்கள்; சலம் முதல் அறுத்து - சினத்திற்கு மூலகாரணமான அகந்தையைக் கிழங்கோடு களைந்து; அருந்தருமம் தாங்கினார் - அரிய அறங்களைப் போற்றுபவர்கள்.
அமைச்சர்கள் குடிப்பிறப்பு, கல்வி, கேள்விச் சிறப்பு, நடுவு நிலைமை, சினமின்மை ஆகிய பண்புகளோடு திகழ்ந்தனர் என்பது கூறப்பட்டது. குப்பை - தொகுதி, மிகுதி. தாங்குதல் - போற்றிக் காத்தல். சலம் - கோபம்; வஞ்சனையும் ஆம். முதல் - முதன்மை, சிறப்பு, வேர் என்னும் பல்வேறு பொருளில் வந்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- They had the ancient worth of noble lineage, a wealth of learning,
- much excellent knowledge gained by listening, and its fruit;
- though their own good were ruined at the root, they looked only to what is just;
- cutting out anger at its root, they upheld dharma, hard to keep.
What the poem says
The poet now describes the ministers who come to the council. Their qualifications are old and noble birth, broad learning, wisdom gained by listening to the learned, impartiality even at cost to themselves, and freedom from anger.
The word mutal ("first", "chief", "root") recurs in every line with a different shade of meaning.