கம்பராமாயணம் 1391 · அயோத்தியா 1.4

Section அயோத்தியா காண்டம் / 1. மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பூ வருபொலன் கழல் - அழகு பொருந்திய பொன்னால் ஆன வீரக் கழலை அணிந்த; பொரு இல் மன்னவன் காவலின் - நிகரில்லாத அரசனான தயரதனின் ஆட்சியில்; ஆணை செய் கடவுள் ஆம் என - கட்டளையிடும் கடவுளாக உள்ளான் என்னும்படி; தேவரும் முனிவரும் உணரும் - தேவர்களும் இருடிகளும் தேடி அறியும்; தேவர்கள் மூவரின் - தேவர்களான நான்முகன், திருமால், சிவபிரான் என்றுசொல்லப்பெறும் மூவர்களோடு சேர்த்து; நால்வராம் முனி வந்து எய்தினான் - நால்வராக எண்ணப்படுகின்ற வசிட்ட முனிவன் வந்து சேர்ந்தான்.

தயரதன் ஆட்சியில் அவனுக்கு ஆணையிடும் ஆற்றல் உடையவன் வசிட்டன் என்று வசிட்டனின் ஏற்றம் கூறப்பட்டது. அவன் அமைச்சருள் முதல்வனும், புரோகிதனும், குலகுருவும் பிரமஇருடியுமாகத் திகழ்தலின் அவன் வரவு தனியே பிரித்துரைக்கப்பட்டது. பொலன் கழல் - பொன்கழல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. So that in the realm of the matchless king of the lovely golden anklet
  2. he seemed a god who gives commands,
  3. known to gods and sages as one who, with the three gods,
  4. makes a fourth, the sage came and arrived.

What the poem says

First to arrive is Vaciṭṭaṉ (Vasiṣṭha), the family preceptor. He is so exalted that in Tacarataṉ's kingdom he is like a god who can give orders even to the king, and he is counted as a fourth beside Brahmā, Viṣṇu and Civaṉ.

His arrival is told separately because he is at once chief minister, royal priest, family guru and a brahmarṣi, the highest rank of sage.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pū varu polaṉ kaḻal poru il maṉṉavaṉ
kāvaliṉ āṇai cey kaṭavuḷ ām eṉa
tēvarum muṉivarum uṇarum tēvarkaḷ
mūvariṉ nālvar ām muṉi vantu eytiṉāṉ.