கம்பராமாயணம் 1390 · அயோத்தியா 1.3

Section அயோத்தியா காண்டம் / 1. மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சந்திரற்கு உவமை செய் - சந்திரனுக்கு உவமையாக்குதற்கு உரிய; தரளம் வெண்குடை - முத்துகளால் அலங்கரிக்கப்பட்ட வெண்ணிறக் கொற்றக் குடையானது; அந்தரத்து அளவு நின்று - விண்ணுலகம் வரை நிற்க; அளிக்கும் ஆணையான் - காவல் புரியும் ஆணைச் சிறப்புடைய தசரதன்; இந்திரற்கு இமையவர் குருவை ஏய்ந்த - தேவர் தலைவனான இந்திரனுக்கு வியாழ பகவானை ஒத்த; தன் மந்திரக் கிழவரை - தன் ஆலோசனைச் சுற்றத்தவரை; வருக என்று ஏவினான் - வருக என்று கட்டளையிட்டான்.

சந்திரனைப் போன்ற வெண்கொற்றக்குடை என்று சந்திரனை உவமையாகச் சொல்லாமல் சந்திரனுக்கு உவமையாகச் சொல்லத்தக்க வெண்கொற்றக் குடை என்றது குடையின் ஏற்றத்தைக் குறித்தது. இது “தீதிலா வடமீனின் திறம் இவள் திறம்” என்பது போன்றது; எதிர்நிலை யுவமையணி ஆகும். தயரதன் குடை அந்தரத்து அளவு நின்று அளித்தமை, அவன் சம்பராசுரனைவென்று தேவலோகத்தை இந்திரனுக்கு அளித்ததனால் விளங்கும். இமையவர் குரு - வியாழபகவான்; பிருகஸ்பதி. மந்திரக் கிழவர் - அமைச்சர் புரோகிதர் முதலானோர். மா. செய்தெனஎச்சம் செயவென் எச்சமாகத் திரிந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He whose white umbrella, set with pearls, is fit to be the moon's own likeness,
  2. whose rule stands guard all the way up to the sky,
  3. sent for those who were to him what the gods' preceptor is to Intiraṉ,
  4. his elders of counsel, commanding, 'Let them come!'

What the poem says

Tacarataṉ summons his councillors. His royal umbrella is so splendid that the moon would be compared to it rather than it to the moon, a reversed simile. His protection reaches to heaven itself, since he once defeated the demon Camparaṉ and restored the gods' world to Intiraṉ.

His advisers, ministers and priests alike, are to him what Bṛhaspati, guru of the gods, is to Intiraṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cantiraṟku uvamai cey taraḷa veṇkuṭai
antarattaḷavum niṉṟu aḷikkum āṇaiyāṉ,
intiraṟku imaiyavar kuruvai ēynta taṉ
mantirak kiḻavarai 'varuka'! eṉṟu ēviṉāṉ.