கம்பராமாயணம் 1389 · அயோத்தியா 1.2

Section அயோத்தியா காண்டம் / 1. மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1புக்க பின் 'நிருபரும் பொரு இல் சுற்றமும்
பக்கமும் பெயர்க ' எனப் பரிவின் நீக்கினான் ;
ஒக்க நின்று , உலகு அளித்து , யோகின் எய்திய
சக்கரத்தவன் எனத் தமியன் ஆயினான் .

பொருள் · Meaning in Tamil

புக்க பின் - தசரதன் மந்திராலோசனை மண்டபத்தில் புகுந்த பிறகு; நிருபரும் - மன்னர்களும்; பொருவு இல் சுற்றமும் - நிகரற்ற உறவினர்களும்; பக்கமும் - தன் அன்பிற்குரிய நண்பர்களும்; பெயர்க என - இவ்விடத்தை விட்டு அகல்க என்று சொல்லி; பரிவின் நீக்கினான் - அவர்களை அன்புடன் நீங்குமாறு செய்து; ஒக்க நின்று உலகு அளித்து - பின்பு அவன் யாவரிடமும் சமமாக நின்று உலகத்தைக் காத்து; யோகன் எய்திய சக்கரத்தவன் என - அறிதுயிலை அடைந்த சக்கரம் ஏந்திய திருமாலைப் போல; தமியன் ஆயினான் - தனித்தவன் ஆயினான்.

மன்னர்கள் முதலியோர் அரசனை அரண்மனையிலிருந்து பின் தொடர்ந்துவந்தவர். சக்கரம் உடைமை, உலகு அளித்தல், தனியனாய் இருத்தல் ஆகியவற்றால் திருமால் தயரதனுக்கு உவமை ஆயினான். யோகு - அறிதுயில். மந்திராலோசனை ஆதலின் அன்புடையராயினும் அவர்களை அன்புடன் அகலச்செய்தான் என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Once inside, he said, 'Let the kings, my matchless kinsmen
  2. and my companions withdraw,' and gently sent them away;
  3. and like him who stands equal to all, protects the world and sinks into his yogic sleep,
  4. the bearer of the discus, he remained alone.

What the poem says

Council must be held in private, so Tacarataṉ courteously dismisses the kings, kinsmen and friends who have followed him from the palace.

Sitting alone, he is compared to Viṣṇu: both bear the wheel (the god's discus, the king's wheel of authority), both protect the world impartially, and both are solitary, Viṣṇu in his meditative sleep on the cosmic ocean.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pukkapiṉ 'niruparum poru il cuṟṟamum
pakkamum peyarka' eṉap pariviṉ nīkkiṉāṉ;
okka niṉṟu, ulaku aḷittu, yōkaṉ eytiya
cakkarattavaṉ eṉat tamiyaṉ āyiṉāṉ.