கம்பராமாயணம் 1388 · அயோத்தியா 1.1
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பண்உறு படர்சினம் பரும யானையான் - ஒப்பனை செய்யப்பட்ட மிக்கசீற்றத்தையும் கழுத்து மெத்தையையும் உடைய பட்டத்து யானையையுடைய தசரதன்; மண்உறுமுரசு இனம் - மார்ச்சனை அமைந்த முரசங்களின் தொகுதி; மழையின் ஆர்ப்பு உற - மேகங்களைப் போல முழங்கவும்; கண் உறு கவரியின் கற்றை - காண்பவர் கண்ணில் அழகினால் நிற்கும் கவரிமானின் மயிர்க் கற்றையால் அமைந்த சாமரை; சுற்று உற - சூழ்ந்து வரவும்; எண் உறு சூழ்ச்சியின் இருக்கை - ஆராய்வதற்குப் பொருத்தமாகிய மந்திராலோசனை மண்டபத்தை; எய்தினான் - அடைந்தான்.
கவரி - சமரம் என்னும் மானின் வால் மயிரைக் கொண்டு செய்யப்பட்ட அரச அடையாளங்களுள் ஒன்று. பருமம் - யானைமேல் அரசர் இருத்தற்கு அமைக்கப்படும் இருக்கை. இதனைக் கலனை என்றும் கல்லணை என்றும் கூறுவர். மண் - மார்ச்சனை. கண்உறு என்பதற்கு விளக்கம் பொருந்திய என்றும் பொருள் கூறலாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the ranks of tuned war drums roared like rain clouds,
- he of the caparisoned state elephant, fierce in its spreading rage,
- with clusters of yak-tail fans, lovely to the eye, waving all about him,
- came to the hall where counsel is weighed and taken.
What the poem says
The Ayōttiyā Kāṇṭam opens with the Chapter of Counsel. Tacarataṉ, in full royal state, drums thundering and yak-tail whisks waving around him, goes to the council hall to deliberate on a matter of state: the crowning of Irāmaṉ.
The yak-tail fan is one of the insignia of kingship, and the paruma is the seat on which a king rides his elephant.