கம்பராமாயணம் 1394 · அயோத்தியா 1.7

Section அயோத்தியா காண்டம் / 1. மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1காலமும் இடனும் ஏற்ற கருவியும் தெரிந்து கற்ற
நூலுற நோக்கித் தெய்வம் நுனித்து , அறம் குறித்து , மேலோர்
சீலமும் புகழ்க்கு வேண்டும் செய்கையும் தெரிந்துகொண்டு ,
பால் வரும் உறுதி யாவும் தலைவன் கு பயக்கும் நீரார் .

பொருள் · Meaning in Tamil

ஏற்ற காலமும் இடனும் கருவியும் தெரிந்து - வினை செய்தற்குத் தக்க காலத்தையும் இடத்தையும், அதற்குரிய கருவிகளையும் அறிந்து; கற்ற நூல் உற நோக்கி - தாம் படித்த அரச நீதி நூல்களின் கருத்துகளோடு ஒப்பிட்டுக் கண்டு; தெய்வம் நுனித்து - தெய்வத்தையும் தியானித்து; அறம் குணித்த மேலோர் - அரசியல் அறத்தைப் பெருக்கிய மேலோர்கள்; சீலமும் புகழ்க்கு வேண்டும் செய்கையும் - ஒழுக்கத்தையும் புகழ் அடைவதற்குரிய செயல்களையும்; தெரிந்துகொண்டு - ஆராய்ந்து அறிந்துகொண்டு; பால் வரும் உறுதி யாவும் - அவ் வாராய்ச்சிகளின் பயனாக வரும் நற்பயன்கள் யாவற்றையும்; தலைவற்குப் பயக்கும்நீரார் - தம் அரசனுக்குக் கொடுக்கின்ற தன்மையுடையவர்கள்.

இதனால் அமைச்சர்கள் பணிபுரியும் வகை உரைக்கப்பட்டது. இடன் - கடைப்போலி. நுனிதல் - நுட்பமாக அறிதல். பால்வரும் உறுதி - அந்த அந்தப் பகுதிகளால் விளையும் நன்மை.

கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்ட தமைச்சு அருவினை என்ப உளவோ கருவியான் காலம் அறிந்து செயின் (குறள், 631, 483)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Discerning the time, the place and the fitting means, and weighing all
  2. by the books they had learned, searching out the divine will, those noble men who reckoned up dharma
  3. would discern what is upright and the deeds that fame demands,
  4. and so bring their lord every benefit that each could yield.

What the poem says

This verse shows how the ministers work. Before any action they weigh time, place and means, test the plan against the treatises of statecraft, seek divine guidance, and consider what is upright and what will bring renown. All the advantage they find, they deliver to the king.

Two Kuṟaḷ couplets are quoted: a minister excels in means, timing and method, and nothing is too hard for one who acts with the right means at the right time.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kālamum iṭaṉum ēṟṟa karuviyum terintu kaṟṟa
nūl uṟa nōkki, teyvam nuṉittu, aṟam kuṇitta mēlōr
cīlamum pukaḻkku vēṇṭum ceykaiyum terintukoṇṭu,
pālvarum uṟuti yāvum talaivaṟkup payakkum nīrār.