கம்பராமாயணம் 1395 · அயோத்தியா 1.8
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தலைமகன் வெகுண்ட போதும் - அரசன் சீற்றங்கொண்ட காலத்திலும்; தம் உயிர்க்கு இறுதி எண்ணார் - இதனைச் சொன்னால் தம் உயிர்க்கு அழிவு விளையும் என்றுகூட நினையாதவராய்; வெம்மையைத் தாங்கி - அவனது சீற்றத்தின் கொடுமையை ஏற்றுக்கொண்டு; விடாதுநின்று நீதி உரைக்கும் வீரர் - தம் கடமையை விட்டுவிடாமல் உறுதியாக நின்று உரிய நீதிகளை எடுத்துச்சொல்லும் துணிவு மிக்கவர்கள்; செம்மையில் திறம்பல் செல்லாத் தேற்றத்தார் - நன்னெறியிலிருந்து வழுவுதல் இல்லாத தெளிவுடையவர்கள்; தெரியும் மும்மைக் காலமும் - அறியத்தக்க முக்கால நிகழ்வுகளையும்; உணர வல்லார் - உணரத்தக்க ஆற்றல் பொருந்தியவர்கள்; ஒருமையே மொழியும் நீரார் - உண்மையையே பேசும் இயல்பினையுடையவர்கள்.
இறுதி - அழிவு; ஆபத்து. எண்ணார் - முற்றெச்சம். தாம் கொண்ட முடிவில் ஊற்றமாய் நின்று எதிர்ப்புகளை வீழ்த்தி மேம்படுதலால் வீரர் என்று புகழப்பெற்றனர் என்க. காலம் நிகழ்ச்சியைச் சுட்டிற்று. ஒன்றல்லது இரண்டன்மையின் ஒருமை என்பது உண்மையைச் சுட்டியது. ஒருமையே மொழியும் நீரார் என்பதற்கு முன்னுக்குப்பின் மாறுபட்டுப் பேசாமல் ஒருபடியாகப் பேசுபவர் என்றும் பொருள் கொள்ளலாம். அமைச்சர் பலராயினும் ஒருமிடறாய்க் கருத்துரைப்பர் என்பதாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- They gave no thought to the end of their own lives; even when their lord was angry
- they bore the heat of it, heroes who held firm and spoke what was just;
- theirs was a clarity that never swerved from the straight way; they could grasp
- all three times that may be known; and it was their nature to speak as one.
What the poem says
Courage is the ministers' defining virtue: even if the king flies into a rage, they stand firm and tell him what is right, though it may cost them their lives. That steadfastness is why the poet calls them heroes.
They never stray from the right path, they understand past, present and future, and they speak the truth. "Speaking oneness" can mean speaking truth, never contradicting themselves, or, though many, speaking with one voice.