கம்பராமாயணம் 1396 · அயோத்தியா 1.9
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நாயகற்கு - தன் அரசனுக்கு; நல்லவும் தீயவும் நாடி - நன்மை தருவனவற்றையும் தீமை பயப்பனவற்றையும் ஆராய்ந்து; எல்லை - முடிவில்; மருத்துவர் இயல்பின் - நோயாளிகளின் விருப்பு வெறுப்புகளை நோக்காது அவர்களது நலத்தைநோக்கிச் செயற்படும் மருத்துவர்களின் தன்மைபோல; எண்ணுவார் - தலைவனுக்கு நன்மையையே கருதுவர்; ஒல்லை வந்து உறுவன - அன்றியும் விரைவில் வந்து சேரும் தீங்குகள்; உற்ற பெற்றியின் - நேர்ந்த இடத்து; தொல்லைநல்வினை என - முன்னர்ச் செய்த புண்ணியம் வந்து உதவுவது போல; உதவும் சூழ்ச்சியார் - அத்தீங்குகளைப் போக்கத் துணைபுரியும் சிந்தனைத்திறம் உடையவர்களும் ஆவார்.
இங்கு அமைச்சர்கள் மருத்துவர்களைப் போன்று இருந்தனர் என்று சுட்டப்படுகிறது. நோயற்றவன் உறுதிபெற ஊட்டம் தரும் மருந்தினை நாடியும் நோயுற்றவன் நலம்பெற நோய் நாடி, அதன் காரணத்தை நாடி, அதனைத் தணிக்கும் வழிகளை நாடி, நோயாளி நோய் ஆகியவற்றின் தன்மைக்கேற்பத் தக்கவாறு செயற்படுபவர் மருத்துவர். அதுபோல அமைச்சர்களும் அரசன் ஆட்சி நலமுடன் திகழச் செய்தற்குரியவற்றைத் தேர்ந்து தெளிந்து செயற்படுத்தியும், தீமை நேர்ந்துழி அதனை ஆராய்ந்து காரணத்தைக் கண்டறிந்து, நீக்குதற்குரிய வழிகளை எண்ணித் தக்கது கொண்டு துப்படைதும் செய்தனர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Searching out the good and the bad for their lord,
- they would think it through to the end, as a physician does;
- and when troubles came on suddenly, theirs was a counsel that helped
- as merit stored up from of old comes to help.
What the poem says
The ministers are like good doctors, who look not to what the patient wants but to what will make him well, seeking the cause of a disease and the way to cure it. In the same way they weigh what is good and bad for the king's rule.
When trouble strikes without warning, their counsel rescues the kingdom the way merit earned in a past life comes unbidden to a person's aid.