கம்பராமாயணம் 1397 · அயோத்தியா 1.10

Section அயோத்தியா காண்டம் / 1. மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

திருவின் பெட்பினர் - செல்வப் பெருக்கம் வாய்ந்தவர்கள்; அறுபதினாயிரர் எனினும் - அறுபதினாயிரம் பேர் என்றாலும்; ஆண்தகைக்கு உறுதியின் - ஆண்மையிற் சிறந்தவனாகிய தசரதனுக்கு நன்மையைக் கருதுவதில்; இவர்க்கு உணர்வு ஒன்று என்று - இவர்கள் எல்லோர்க்கும் அறிவு ஒன்றே என்று; உன்னல்ஆம் - நினைக்கத்தக்க; பெறல் அருஞ் சூழ்ச்சியர் - பெறுவதற்கு அரிய ஆராய்ச்சி நிறைந்த அமைச்சர்கள்; மறிதிரைக் கடல் என - மடங்கி விழும் அலைகளையுடைய கடல்போல; வந்து சுற்றினார் - அரசவைக்கு வந்து நிறைந்தார்கள்.

கம்பர் அமைச்சர் மிகப் பலர் என்பதனைச் சுட்ட அறுபதினாயிரம் என்னும் எண்ணைக் குறிக்கிறார். இவ்வாறே தசரதன் ஆட்சிபுரிந்த காலம் அறுபதினாயிரம் ஆண்டு (182), அவன் மனைவியர் அறுபதினாயிரவர் (1779), சனகன் அவைக்கு வில்லைத் தூக்கிவந்த வீரர் அறுபதினாயிரவர் (668) என்றும் குறிப்பர். பெருவேந்தர்களுக்கு எல்லாம் அறுபதினாயிரம் என்று குறித்தல் சிலரது போக்கு. சூழ்ச்சி - பலகால் எண்ணுதல்; ஆராய்ச்சி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Though they numbered sixty thousand, in seeking the good of that manly king
  2. one could think they shared a single mind; men of counsel
  3. hard to come by, rich in fortune,
  4. they came and gathered round like the sea with its rolling waves.

What the poem says

The ministers stream into the hall like the waves of the sea. Sixty thousand is the poet's way of saying "a great many"; he uses the same number for the years of Tacarataṉ's reign, for his wives, and for the men who carried Civaṉ's bow into Caṉakaṉ's court.

However many they are, in seeking the king's welfare they think as one.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṟupatiṉāyirar eṉiṉum, āṇtakaikku
uṟutiyil, oṉṟu ivarkku uṇarvu eṉṟu uṉṉalām
peṟal aruñ cūḻcciyar; tiruviṉ peṭpiṉar;
maṟi tiraik kaṭal eṉa vantu cuṟṟiṉār.