கம்பராமாயணம் 1398 · அயோத்தியா 1.11

Section அயோத்தியா காண்டம் / 1. மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

முறைமையின் எய்தினர் - அவ் அமைச்சர்கள் அரசவைக்குச் செல்லுதற்குரிய முறைப்படியே அணுக; முந்தி அந்தம் இல் அறிவனை வணங்கி - முதலில் முடிவில்லாத அறிவினையுடைய வசிட்ட முனிவனைப் பணிந்து; தம் அரசைக் கைதொழுது - பின்னர்த் தம் அரசனாகிய தசரதனைக் கைகூப்பிக் கும்பிட்டு; இறையிடை வரன்முறை ஏறி - தம் இருக்கைகளில் வரிசைக்கேற்ப ஏறி; ஏற்ற சொல்துறை அறி பெருமையான் - சூழ்நிலைக்குத் தக்கவாறு பேசும் முறைமை அறிந்த பெருமைக்குரிய மன்னன்; அருளும் சூடினார் - அருட்பார்வையையும் பெற்றார்கள்.

அந்தம் இல் அறிவன் - பேரறிவு நிறைந்தவன்; பிரம ஞானம் வாய்க்கப் பெற்றவன். வணங்குதல் - குனிந்து நிலம் தொட்டுப் பணிதல்; தண்டன்சமர்ப்பித்தல். கைதொழுதல் - நின்றவாறே கைகூப்பிப் பணிதல். இறை - தவிசு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They came in due order, first bowing low to the sage
  2. whose wisdom has no end, then joining their palms before their king;
  3. they took their seats by rank, and from the great one who knew the ways of fitting speech
  4. they received, like a crown, his gracious regard.

What the poem says

Court etiquette is observed precisely. The ministers first prostrate themselves before Vaciṭṭaṉ, whose wisdom is boundless, then salute the king standing with joined palms.

They take their seats in order of rank, and the king, who always knows the right word for the moment, acknowledges them with a gracious look.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1muṟaimaiyiṉ eytiṉar, munti antam il
aṟivaṉai vaṇaṅkit tam aracaik kaitoḻutu,
iṟaiyiṭai varaṉmuṟai ēṟi, ēṟṟa col
tuṟai aṟi perumaiyāṉ aruḷum cūṭiṉār.