கம்பராமாயணம் 1399 · அயோத்தியா 1.12

Section அயோத்தியா காண்டம் / 1. மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அன்னவன் அருள் அமைந்து இருந்த ஆண்டையின் ,
மன்னவன் அவர் முகம் மரபின் நோக்கினான் ;
'உன்னியது அரும் பெறல் உறுதி ஒன்று உளது ;
என் உணர்வு அனைய நீர் இனிது கேட்க ' எனா .

பொருள் · Meaning in Tamil

அன்னவர் - அந்த அமைச்சர்கள் எல்லோரும்; அருள்அமைந்து இருந்த ஆண்டையில் - மன்னன் அருளைப் பெற்று இருக்கையில் அமர்ந்திருந்த அக்காலத்தில்; மன்னனும் அவர் முகம் - தயரதனும் அவர்களது முகத்தை; மரபின் நோக்கினான் - முறையாகப் பார்த்தான்; “உன்னிய - என்னால் நினைக்கப்பட்ட; பெறல் அரும்உறுதி ஒன்று உளது - பெறுதற்கு அரிய உறுதிப் பொருள் ஒன்று உள்ளது; என் உணர்வுஅனைய நீர் - (அதனை) என் உணர்வை ஒத்த நீவிர்; இனிது கேட்டிரால் - நன்றாகக் கேட்பீர்களாக” என்றான்.

உறுதி - ஈண்டு உறுதியைப் பயக்கும் பொருளைக் குறித்தது. அஃதாவது இராமனுக்கு முடிசூட்டித் தான் வீடுபேறு அடைதற்குரிய நெறியில் செல்லத் தயரதன் நினைத்ததைக் குறித்தது. யான் உணர்தற்குரியதை நீங்கள் உணர்ந்து கூறும் தன்மையுடையீர் என்னும் கருத்தினால் “என் உணர்வு அனைய நீர்” என்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When they were seated there, having received his grace,
  2. the king looked at their faces, as custom required:
  3. 'There is a matter I have been pondering, of rare and lasting good;
  4. you, who are like my own understanding, hear it well.'

What the poem says

The king opens the council. His plan, the commentary explains, is to crown Irāmaṉ and then set out on the path to liberation himself.

He calls his ministers "like my own understanding", meaning that they can see clearly and tell him what he himself needs to grasp.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉṉavar aruḷ amaintu irunta āṇṭaiyil,
maṉṉaṉum, avar mukam marapiṉ nōkkiṉāṉ;
'uṉṉiya arum peṟal uṟuti oṉṟu uḷatu;
eṉ uṇarvu aṉaiya nīr iṉitu kēṭṭirāl.'