கம்பராமாயணம் 142 · பால 3.61
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வளை ஒலி வயிர் ஒலி - (அந்த நகரமெங்கும்) சங்குகளின் ஓசை, கொம்புகளின் ஓசை; மகர வீணையின் கிளை ஒலி - மகர யாழ் இனங்களின் ஓசை; முழவு ஒலி கின்னரத்து ஒலி - மத்தள ஓசை; கின்னர ஓசை; துளை ஒலி - துளைக் கருவிகளான புல்லாங்குழல் முதலியவைகளின் ஓசை; பல்இயம் துவைக்கும் - மற்றும் பலவகை வாத்தியங்கள் முழக்கும்; சும்மையின் விளைவு ஒலி - ஆரவாரத்தின் விளைவாக உண்டாகும் ஓசை; கடல் ஒலி மெலிய விம்மும் - (ஆகிய இவ்வோசைகள் எல்லாம்) கடல் முழக்கமும் மெலியும்படி ஒலிக்கும்.
அயோத்தி நகரமெங்கும் சங்கு முதலியவைகளின் ஒலி, கடல் முழக்கம் கீழ்ப்பட மேலோங்கி முழங்கும் என்கிறார். வளை: சங்கு. வீணையின் கிளை: வீணையின் இனம். கின்னரம்: ஒருவகை யாழ். துளை: துளைக் கருவிகள் (ஆகுபெயர்). சும்மை: பேரொலி. துவைக்கும்: முழக்கும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The sound of conches, the sound of horns, the sound of the makara-lute
- and its kin, the sound of drums, the sound of the kinnaram,
- the sound of flutes, and the roar that rises from the uproar
- of many instruments thundering together — it swells till the sea's roar grows faint.
What the poem says
A catalogue of the city's music. Conches, horns, lutes of several kinds, drums, the kinnaram harp and flutes all sound together.
The combined din of Ayōttī is so loud that it drowns out the roar of the ocean.