கம்பராமாயணம் 141 · பால 3.60
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அதிர்கழல் ஒலிப்பன - அந்நகரத்திலே அதிர்கின்ற வீரக் கழல்களின் ஒலி ஆர்ப்பரித்து ஒலிப்பனவாக; அயில் இமைப்பன - வேல் முதலிய படைக்கலங்கள் ஒளிர்வனவாக; கதிர்மணி அணி வெயில் கால்வ - ஒளிமிக்க மணிகளாலான அணிகலன்கள் எங்கும் ஒளிவீசுபவையாக; மான்மதம் முதிர்வு உறக் கமழ்வன - கத்தூரி மிகுதியும் கமழ்வதாக; முத்தம் மின்னுவ - அணிகலன்களில் அமைந்த முத்துக்கள் மின்னல் போல ஒளிர்வன; மதுகரம் இசைப்பன - வண்டுகள் பண் பாடுவனவாக; மைந்தர் ஈட்டமே - (இவ்வாறாக) ஆடவர் கூட்டம் விளங்கியது.
மைந்தர் ஈட்டம் கழல் ஒலிக்க, அயில் இமைக்க, வெயில் கால, கமழ்வனவாக, முத்தம் மின்ன, மதுகரம் இசைக்க இழுத்தன எனக் கொண்டு கூட்டி முடிக்க.
மதுகரம்: தேனைச் சேகரிக்கும் வண்டுகள்; முத்தம்: முத்து மாலை முதலிய அணிகள்; மான் மதம்: கத்தூரி மானிடமிருந்து கிடைக்கும் மணப்பொருள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With ringing anklets of heroes sounding, with spears flashing,
- with jewels of bright gems pouring out radiance, with musk
- breathing its full fragrance, with pearls gleaming
- and bees humming — such were the throngs of young men.
What the poem says
A picture of the young men of Ayōttī out in the streets. You hear the warrior's anklets ringing and see their spears and jewels shining.
They smell of musk, their pearls flash, and bees hum around their garlands. The scene appeals to every sense at once.