கம்பராமாயணம் 144 · பால 3.63
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தோரணம் இரவியின் சுடர்மணி இமைக்கும் - அந்த நகரத்துத் தோரணங்கள் சூரியன் போன்ற சுடர்மிகு மணிகளால் ஒளிரும்; திசைகள் தெருவினின் சிறியன - நெடிய வீதிகளைவிடத் திசைகள் சிறியனவாம்; சேண்விளங்கு அருவியின் பெரியன ஆனைத் தானங்கள் - மலையின் மிக உயர்ந்தே இருக்கும் அருவியை விட யானையின் மதநீர் பெரியதாகும்; பரவையின் பெரியன புரவிப் பந்தி - கடல்களை விடவும் பெரியது, அந்நகரத்தில் குதிரைகள் கட்டும் இடம்.
திசைகள் தெருவினில் சிறியன என்றது உயர்வு நவிற்சியின் எல்லை. தானம்: மதநீர்; பந்தி: குதிரை கட்டும் லாயம்; சேண்: உயரம்.
சுடர்மணி வினைத்தொகை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Its archways flash with gems bright as the sun;
- the directions are smaller than its streets; the elephants' streams of ichor
- are greater than the waterfalls that shine on high;
- the horses' stables are vaster than the sea.
What the poem says
Each line is a piece of deliberate exaggeration about the city's size and wealth. The streets are longer than the directions of space, and the elephants' ichor flows more freely than mountain waterfalls.
The stables hold more horses than the sea holds water. The commentary calls the line about the streets the very limit of hyperbole.