கம்பராமாயணம் 145 · பால 3.64

Section பால காண்டம் / 3. நகரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சூளிகை மழை முகில் தொடக்கும் - அந்நகரத்து மாளிகைகளின் உச்சி (மிக உயர்ந்திருப்பதால்) மேகத்தைப் பிணிக்கும்; தோரண மாளிகை மகளிர் வாண்முகம் மலர்வன - தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு விளங்கும் மாளிகைகளிலெல்லாம் மகளிரின் ஒளிமிகு முகங்கள் மலர்ந்து பொலிவனவாகும்; அன்னவை வாளிகள் மலர்வ - அம்முகங்களில் அம்புகள் விளங்குகின்றன (கண்கள்); மற்று அவை ஆளிகள் அன்னவர் நிறத்தில் ஆழ்ப - மற்று, அவ்வம்புகள் சிங்கத்தை ஒத்த ஆடவர்களின் மார்பில் ஆழ்வனவாம்.

தொடக்கும்: பிணிக்கும்; வாள்முகம்: ஒளி பொருந்திய முகம்; வாளிகள்: அம்புகள்; கண்களை அம்பு என்றது உருவகம்; நிறம்: மார்பு; அன்னவை: அம்முகங்கள்; ஆளி: சிங்கம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. In the towered mansions, whose rooftops catch the rain clouds,
  2. the bright faces of women bloom;
  3. in them bloom arrows, and those arrows
  4. sink deep into the breasts of men who are like lions.

What the poem says

The mansions are so tall that their roofs snag the clouds, and at every window the women's faces appear like flowers.

Their eyes are arrows, and these arrows sink into the chests of even the lion-hearted men of the city. Calling the eyes arrows is a metaphor.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cūḷikai maḻai mukil toṭakkum tōraṇa
māḷikai malarvaṉa makaḷir vāḷ mukam;
vāḷikaḷ aṉṉavai malarva, maṟṟu avai
āḷikaḷ aṉṉavar niṟattiṉ āḻpavē.