கம்பராமாயணம் 1467 · அயோத்தியா 1.80

Section அயோத்தியா காண்டம் / 1. மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'தானமும் , தருமமும் , தவமும் , தன்மை சேர்
ஞானமும் , நல்லவர்ப் பேணும் நன்மையும் ,
மானவ ! வையம் நின் மகற்கு வைகலும்
ஈனம் இல் செல்வம் வந்து இயைக என்ன ஏ . '

பொருள் · Meaning in Tamil

மானவ - மனுவின் குலத்தில் தோன்றியவனே!; நின் மகற்கு - உன் மகனிடத்தில்; ஈனம் இல் செல்வம் - தாழ்வில்லாத அரசச் செல்வம்; வந்து இயைக என்ன - வந்து பொருந்தக் கடவது என்று சொல்வது போல; தானமும் - கொடைத் தன்மையும்; தருமமும் - அறநெறியும்; தகவும் - ஒழுக்கமும்; தன்மை சேர் ஞானமும் - மேன்மை பொருந்திய மெய்யுணர்வும்; நல்லவர்ப் பேணும் நன்மையும் - பெரியோரைப் போற்றிக் காக்கும் நற்பண்பும்; நின்மகற்கு வைகலும் வைகும் - உன் மகனுக்கு என்றும் நிலையாகத் தங்கியுள்ளன.

இதனால் இராமனுக்கு அரசனாதற்குரிய அனைத்துத் தகுதிகளும் உள்ளன என்றனர் அரசர்கள். தானம் - அறநெறியால் வந்த பொருளைத் தக்கார்க்கு உவகையொடுங் கொடுத்தல். நல்லவர்ப் பேணும் நன்மை - இரண்டன் தொகை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Generosity and dharma and right conduct, and wisdom
  2. joined with true excellence, and the goodness that cherishes the good,
  3. O scion of Maṉu, abide in your son every day,
  4. as if to say, 'Let flawless wealth come and be joined to him.'"

What the poem says

The kings continue their reply to Tacarataṉ, addressing him as a descendant of Maṉu, the first lawgiving king. They list the virtues that already live in Irāmaṉ: generosity, here meaning gifts of rightly earned wealth given gladly to the deserving, righteousness, good conduct, true wisdom, and care for the worthy.

These qualities, they say, are so constant in him that they seem to be calling royal fortune to come to him. In short, he has every qualification for kingship.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'tāṉamum, tarumamum, takavum, taṉmai cēr
ñāṉamum, nallavarp pēṇum naṉmaiyum,
māṉava! vaiyam niṉ makaṟku vaikalum
īṉam il celvam vantu iyaika eṉṉavē.'