கம்பராமாயணம் 1466 · அயோத்தியா 1.79

Section அயோத்தியா காண்டம் / 1. மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1இ வ்வகை உறைசெய , இருந்த வேந்தர்கள் ,
'செவ்விய நின் திரு மகற்குத் தேயத்தோர்
அவ் அவர்க்கு அவ் அவர் ஆற்ற ஆற்றுறும்
எவ்வம் இல் அன்பினை இனிது கேள் ' எனா .

பொருள் · Meaning in Tamil

இவ் வகை உரை செய - (தயரதன்) இவ்வாறு வினவ; இருந்த வேந்து அவை - அங்கே இருந்த அரசர் கூட்டம்; செவ்வியோய் - (தயரதனை நோக்கி) செப்பமுடையோய்!; நின் திருமகற்கு - உன் மகன்மீது; தேயத்தோர் அவ்வவர்க்கு - அங்கங்கே பற்பல நாட்டில் உள்ளோரும்; அவ்வவர் ஆற்ற ஆற்றுறும் - அவரவர்களும் மிகவும் செய்கின்ற; எவ்வம் இல் அன்பினை - குறைவில்லாத அன்பினை; இனிது கேள் எனா - இன்பமாகக் கேட்பாய் என்று சொல்லி.

இது முதல் நான்கு பாக்களும் ஒரு தொடர். திருமகற்கு - உருபு மயக்கம்; “கு” ஏழனுருபில் வந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When he spoke in this way, the assembly of kings seated there said:
  2. "Gracious one, toward your noble son the people of every land,
  3. each of them on their own part, bear in full measure
  4. a flawless love; hear of it with pleasure"; and so saying

What the poem says

The kings answer Tacarataṉ's test. They tell him that people in every land, each in their own way, love his son with a love that has no flaw, and they invite him to hear about it with pleasure.

This verse begins a sentence that runs across four verses, so it ends in mid-sentence.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ivvakai uraiceya, irunta vēntu avai
'cevviyōy! niṉ tirumakaṟkut tēyattōr
avvavarkku avvavar āṟṟa āṟṟuṟum
evvam il aṉpiṉai iṉitu kēḷ' eṉā.