கம்பராமாயணம் 1469 · அயோத்தியா 1.82

Section அயோத்தியா காண்டம் / 1. மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'பனை அவாம் நெடும் கரப் பரும யானையாய் !
நினை அவாம் தன்மையை நினைந்த மன் உயிர்க்கு
எனையவாறு அன்பினன் இராமன் , ஈண்டு அவற்கு ,
அனையவாறு அன்பின அவையும் ' என்றனர் .

பொருள் · Meaning in Tamil

பனை அவாம் நெடுங் கரப் பரும யானையாய் - பனை மரம் போன்ற நீண்ட துதிக்கையையும், அம்பாரியையும் உடைய யானையை உடைய அரசே!; நினை அவாம் தன்மையை நிமிர்ந்த - உன்னை விரும்பும் தன்மையை மிகுதியாகக் கொண்டிருந்த; மன் உயிர்க்கு - நிலைபேறுடைய உயிர்களிடத்தில்; ஈண்டு இராமன் எனையவாறு அன்பினன் - இங்கே இராமன் எவ்வாறு அன்புடையவனாய் இருக்கின்றானோ; அனையவாறு அவையும் அவற்கு அன்பின - அவ்வாறு அவ்வுயிர்களும் அவனிடத்தில் அன்புடையனவாய் இருக்கின்றன; என்றனர் - என்று கூறினர்.

இராமன் மக்களிடத்தும், மக்கள் அவனிடத்தும் காட்டிய அன்புத்திறன் இங்குக் குறிக்கப்பட்டது. பாலகாண்டத்துள் 308 - 312 ஆதம பாடல்களில் இத்தன்மை குறிக்கப்பட்டுள்ளமை ஒப்புநோக்கற்கு உரியது. மன் உயிர்க்கு, அவற்கு - வேற்றுமை மயக்கங்கள்; ‘கு’ உருபு ஏழாம் வேற்றுமையில் மயங்கியது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "King whose saddled elephants have trunks as long as palm trees,
  2. toward the living beings, who overflow with longing for you,
  3. in whatever measure Irāmaṉ here is loving, toward him
  4. in that same measure they too are loving," they said.

What the poem says

The kings close their answer with the heart of the matter: the love between Irāmaṉ and the people is mutual and equal. As much as he loves all living beings, who already love the king, so much do they love him.

Tacarataṉ is addressed by a conventional royal epithet, master of great war elephants with howdahs and trunks like palm trunks. The same mutual affection was described earlier, in the first book of the epic.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'paṉai avām neṭuṅ karap paruma yāṉaiyāy!
niṉai avām taṉmaiyai nimirnta maṉṉuyirkku
eṉaiyavāṟu aṉpiṉaṉ irāmaṉ, īṇṭu avaṟku,
aṉaiyavāṟu aṉpiṉa avaiyum' eṉṟaṉar.