கம்பராமாயணம் 1470 · அயோத்தியா 1.83
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மொழிந்தது கேட்டலும் - அவ்வாறு அவையில் இருந்தவர் கூறியதைக் கேட்டவுடனே; மன்னன் - அரசனாகிய தயரதன்; நெஞ்சினை மொய்த்து - மனத்தினில் முழுதும் நிரம்பி; பொழிந்த பேர் உவகையன் - வெளிப்பட்ட மிக்க மகிழ்ச்சியையுடையவனும்; பொங்கு காதலன் - மேலிடுகின்ற அன்பையுடையவனும்; கழிந்தது என் துயர் என - துன்பம் நீங்கியவனானேன் என்று; களிக்கும் சிந்தையன் - களிப்பை வெளிப்படுத்தும் மனத்தை யுடையவனும்; வழிந்த கண்ணீரினன் - மகிழ்ச்சியால் தானே வழிந்த கண்ணீரையுடையவனுமாகி; கூறுவான் - சொல்வான் ஆயினான்.
நெஞ்சினை - வேற்றுமை மயக்கம்; நெஞ்சில் என ஏழாம் வேற்றுமைப் பொருளது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As soon as he heard what was said, with great joy
- that filled his heart and overflowed, with love welling up,
- his mind exulting, "My sorrow is gone,"
- and tears streaming down, the king spoke.
What the poem says
Satisfied that the kings' approval is sincere, Tacarataṉ no longer hides his feelings. His joy fills his heart and spills over, he feels that his long care is at an end, and tears of happiness run down his face.
The verse simply sets up his next words to the assembly.