கம்பராமாயணம் 1471 · அயோத்தியா 1.84

Section அயோத்தியா காண்டம் / 1. மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1`'செம்மையில் , தருமத்தில் , செயலில் , தீங்கின்பால்
வெம்மையில் ஒழுக்கத்தில் மெய்ம்மை மேவினீர் !
என் மகன் என்பது என் ? நெறியின் ஈங்கு இவன்
நும் மகன் ; கையடை நோக்கும் ஊங்கு '' என்றான் .

பொருள் · Meaning in Tamil

செம்மையின் - (தயரதன் அரசர்களை நோக்கி) நடுநிலைமையிலும்; தருமத்தின் - அரசியல் அறத்திலும்; செயலின் - நற்செய்கையிலும்; தீங்கின்பால் வெம்மையின் - தீச்செயல்களில் கொண்ட வெறுப்பிலும்; ஒழுக்கத்தின் - நடத்தையிலும்; மெய்ம்மை மேவினீர் - உண்மையாக இருப்பவர்களே!; இவன் ஈங்கு - இவ்விராமன் இனிமேல்; என் மகன் என்பது என் - என் பிள்ளை என்று சொல்லுவது ஏன்?; நும் மகன் - உங்கள் பிள்ளையாவான்; கையடை - அவனை உங்களிடம் அடைக்கலமாக்கினேன்; ஈங்கு நோக்கும் என்றான் - இங்கே அவ்வாறே கருதிப் பேணுங்கள் என்றான்.

இவனை என் மகன் என்ன வேண்டா; உங்கள் மகனாகக் கொண்டு போற்றுங்கள் எனத் தயரதன் கூறினான். நோக்கும் - பேணுங்கள்; முன்னிலை வினைமுற்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "In fairness, in dharma, in good deeds, and in your loathing
  2. of evil, and in conduct, you abide in truth!
  3. Why call him my son? From now on, by right, he is
  4. your son; I give him into your care: watch over him here," he said.

What the poem says

Tacarataṉ praises the kings as men true in justice, righteousness, good deeds, conduct and their hatred of wrong. Then he formally entrusts Irāmaṉ to them.

He should no longer be thought of as Tacarataṉ's son alone, but as theirs; they are to protect and cherish him. It is a solemn handing-over of the heir to the circle of allied rulers.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1`'cemmaiyiṉ, tarumattiṉ, ceyaliṉ, tīṅkiṉpāl
vemmaiyiṉ oḻukkattiṉ meymmai mēviṉīr!
eṉ makaṉ eṉpatu eṉ? neṟiyiṉ īṅku ivaṉ
num makaṉ; kaiyaṭai nōkkum īṅku'' eṉṟāṉ.