கம்பராமாயணம் 1472 · அயோத்தியா 1.85

Section அயோத்தியா காண்டம் / 1. மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அரசரை விடுத்தபின் , ஆணை மன்னவன் ,
புரை தபு நாளொடு பொழுதும் நோக்குவான் ,
உரை தெரி கணிதரை ஒருங்கு கொண்டு , ஒரு
வரை பொரு மண்டப மருங்கு போயினான் .

பொருள் · Meaning in Tamil

அரசவை விடுத்த பின் - அரசர் கூட்டத்தை அனுப்பிய பின்பு; ஆணை மன்னவன் - ஆணையைச் செலுத்தும் தயரத மன்னன்; புரைதபு நாளொடு பொழுது - குற்றமற்ற நாளொடு கூடிய முகூர்த்தத்தை; நோக்குவான் - பார்ப்பதற்கு; உரை தெரி கணிதரை ஒருங்கு கொண்டு - சோதிட நூலாராய்ச்சியுடைய சோதிடரைத் தன்னோடு அழைத்துக் கொண்டு; வரை பொரு மண்டபம் மருங்கு - மலையை ஒத்த மண்டபத்தில்; போயினான் - போய்ப் புகுந்தான்.

சோதிடம் பார்க்க அமைதியான சூழல் வேண்டுமாதலின், சோதிடம் வல்லாரோடும் தனியிடம் சென்றான். உரை - ஆகுபெயர்; சோதிட நூலைக் குறித்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Having dismissed the royal assembly, the king whose command held sway,
  2. to look for a faultless day together with its hour,
  3. gathered the astrologers versed in the texts and
  4. went to a hall that rivalled a mountain.

What the poem says

The council is over. Tacarataṉ now needs an auspicious day and moment for the coronation, so he takes his astrologers, men learned in the astronomical texts, to a lofty hall where they can work out the timing undisturbed.

This verse closes the opening canto of the book of Ayōtti. The next canto turns to Mantarai, Kaikēyi's maid, and her plot against the coronation.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aracavai viṭuttapiṉ, āṇai maṉṉavaṉ,
puraitapu nāḷoṭu poḻutu nōkkuvāṉ,
urai teri kaṇitarai oruṅku koṇṭu, oru
varai poru maṇṭapam maruṅku pōyiṉāṉ.