கம்பராமாயணம் 1478 · அயோத்தியா 1.91

Section அயோத்தியா காண்டம் / 1. மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(கோசலை) அன்னளாயும் - அத்தன்மையளாயும், (செய்தி சொன்ன மங்கையர்களுக்கு); அரும்பெறல் ஆரமும் - பெறுதற்கரிய முத்து வடமும்; நல்நிதிக் குவையும் - உயர்ந்த செல்வக் குவியல்களையும்; நனி நல்கி - மிகுதியாகக் கொடுத்து; தன் - தன்னிடத்தில்; துன்னு காதல் - நெருங்கிய அன்பினை உடைய; சுமித்திரையோடும் போய் - சுமித்திரையுடனே சென்று; மின்னும் நேமியன் - ஒளிவிடும் சக்கரப் படையை உடையவனாகிய திருமால்; மேவு இடம் - வீற்றிருந்தருளும் திருக்கோயிலை; மேவினாள் - அடைந்தாள்.

‘தன் நாயகன் துறப்பான்’ என்று தோன்றுகிற அச்சம் அவள் அநுபவிப்பதே யன்றி மற்றவர்களுக்கு வெளிக்காட்ட ஒண்ணாது ஆதலின், மகிழ்ச்சியை வெளிக்காட்டி ஆரமும் நிதியும் சிலதியர்க்கு நல்கினாள். கோசலையும் சுமித்திரையும் நெருங்கியவர்கள் என்பதைத் ‘துன்னு காதல்’ என்ற அடைகளால் அறியலாம். புதல்வன் நன்மையை விரும்பித் திருமாலை வழிபடச் சென்றாள். சூரிய குலமன்னன் ‘இட்சுவாகு’ காலம் தொடங்கித் திருமால் இக் குலமன்னர் குல தெய்வமாக விளங்கின ஆதலின் அவரை வழிபடல் வேண்டிச் சுமித்திரையுடனே சென்றாள். இப்பொழுதே கைகேயி இவ்விருவரின் வேறுபட்டுத் தனித்தன்மையுடன் இருத்தல் அறிதற் பாலது. சுமித்திரை - நல்ல பண்பு நலன்களை உடையவள் என்ற பொருள் உடைய பெயர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Though she was so troubled, she lavishly gave rare necklaces
  2. and heaps of fine treasure, and with Cumittirai,
  3. who held her in close affection, she went
  4. to the place where the lord of the shining discus dwells.

What the poem says

Kōcalai keeps her fear to herself and shows only her joy, rewarding the messengers with pearl necklaces and treasure. Then she goes with Cumittirai, Ilakkuvaṉ's mother and her close friend, to the temple of Tirumāl, the discus-bearing god who has been the family deity of the solar line since Ikṣvāku.

She goes to pray for her son's welfare. The commentary notes that Kaikēyi, the third queen, is already shown standing apart from the other two.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉṉaḷāyum, arum peṟal āramum,
nal nitik kuvaiyum naṉi nalkit taṉ
tuṉṉu kātal cumittiraiyōṭum pōy,
miṉṉum nēmiyaṉ mēvu iṭam mēviṉāṉ.