கம்பராமாயணம் 1477 · அயோத்தியா 1.90

Section அயோத்தியா காண்டம் / 1. மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(அது கேட்ட கோசலைக்கு) “மகற்குச் செல்வம் சிறக்கும்” என - தன் மகனாகிய இராமனுக்கு அரசச் செல்வம் சிறக்க இருக்கிறது என்று; சிந்தையில் - மனத்தில்; பிறக்கும் பேர் உவகைக் கடல் - தோன்றிய பெரிய மகிழ்ச்சிக் கடல்; பெட்பு அற - பெருமையற்றுப் போக; மன்னவன் - தன் நாயகனாகிய தயரதன்; துறக்கும் - துறந்து செல்வான்; என்னும் துணுக்கம் - என்கின்ற அச்சமானது; வறக்கும் - வறண்டுபோகச் செய்யும்; மா - பெரிய; வடவைக்கனல் - வடவைத் தீயை; ஆனது - ஒத்திருக்கிறது.

மகன் முடிசூடுவான் என்ற மகிழ்ச்சியை, மன்னன் துறப்பான் என்ற அச்சம் அடக்கிவிட்டது என்பதை இவ்வாறு கூறினார். வடவைத் தீ - வடவை முகத்தோடு கூடிய நெருப்பு; வடவை - பெண் குதிரை. இந்நெருப்பு கடலின் இடையே உள்ளது எனவும், கடல் நீரை ஓரளவுக்கு மிகாது சுவறச் செய்யும் ஆற்றல் உடையது எனவும், ஊழிக்காலத்தில் மேல் எழும்பி கடல் நீர் அனைத்தையும் வற்றச் செய்துவிடும் எனவும் புராணிகர் கூறுவர். உவகைக் கடல், வடவைக் கனல் என்பன உருவகம். “உறத்தகும் அரசு இராமற்கென்று உவக்கின்ற மனத்தைத் துறத்தி நீ எனும் சொல் சுடும்” (1358) என்ற சுமந்திரன் வார்த்தையை இங்கு ஒப்பு நோக்குக. ‘ஆல்’ ஈற்றசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Fortune will flourish for my son": at that thought, in her mind
  2. a great sea of joy was born; but, so that its delight was lost,
  3. there came, like the mighty mare-faced fire that dries up the sea,
  4. the dread that the king would renounce the world.

What the poem says

Kōcalai's joy at her son's good fortune is immediately checked by fear: crowning Irāmaṉ means that Tacarataṉ, her husband, will give up the throne and leave for the forest life of a retired king.

Her joy is a sea, and the fear is the vaṭavai fire, a mare-headed fire said to burn beneath the ocean, keeping it from overflowing and, at the end of an age, drying it up completely. The minister Cumantiraṉ voices the same mixed feeling later in the book.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'ciṟakkum celvam makaṟku' eṉac cintaiyil
piṟakkum pēr uvakaik kaṭal peṭpu aṟa
vaṟakkum mā vaṭavaik kaṉal āṉatāl,
tuṟakkum maṉṉavaṉ eṉṉum tuṇukkamē.