கம்பராமாயணம் 1480 · அயோத்தியா 1.93

Section அயோத்தியா காண்டம் / 1. மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'என் வயிற்று அரு மைந்தற்கு இனி அருள்
உன் வயிற்றது ' என்றாள் , உலகு யாவையும்
மன் வயிற்றின் அடக்கிய மாயனைத்
தன் வயிற்றின் அடக்கும் தவத்தினாள் .

பொருள் · Meaning in Tamil

உலகு யாவையும் - எல்லா உலகங்களையும்; மன் வயிற்றின் - பெருமை பெற்ற தன் திருவயிற்றின்கண்ணே; அடக்கிய - அடக்கிக் கொண்ட; மாயனை - திருநாராயணனை; தன் வயிற்றில் - தன்னுடைய வயிற்றிலே; அடக்கும் - அடக்கிய; தவத்தினாள் - தவம் பெற்றவளாகிய கோசலை; என் வயின் தரும் மைந்தற்கு - என்னிடமாகப் பிறந்திடத் தந்த மைந்தனாகிய இராமனுக்கு; இனி - இப்பொழுது; அருள் - அருளுவது; உன் வயத்தது - உன்னிடத்துள்ளது; (அருள் செய்வாயாக) என்றாள் - என்று பிரார்த்தனை செய்தாள்.

ஆதேயமாகிய திருமால் உலகத்தைத் தன்வயிற்றில் அடக்கியவன். ஆதாரமாகிய கோசலை அவனையே தன்வயிற்றில் அடக்கியவள் என்றார். ஊழிக்காலத்து அப்பெருமான் உறங்கிக் கிடந்த ஆலிலையைப் போலாயிற்று இவள் வயிறு, அவ்வாலிலையில் தன்னிச்சையாலே உறங்கினான் பெருமாள். ஆனால், இவள் தவத்தாலே இவள் வயிற்றிலே சிக்குண்டு கிடந்தான் என்பதை உணர்த்த ‘தவத்தினாள்’ என்றார். மாயன் - மாயம் உடையவன். ‘கூடாதனவற்றைக் கூட்டுவிப்பது’ மாயமாம். இதை ‘அகடித கடநா சாமர்த்தியம்’ - கூடாததையும் கூட்டுவிக்கும் திறம் என்பர். இனி ‘மாயன்’ உலக காரணமாகிய பிருகிருதி (மாயை)யாகத் தான் உள்ளவன் எனத் தத்துவப் பொருள் கூறலும் ஒன்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "For the son you gave me, from now on grace
  2. rests with you," she said: she whose penance was such
  3. that the Wondrous One, who holds all the worlds within his great belly,
  4. she held within her own womb.

What the poem says

Kōcalai prays to Tirumāl: he gave her this son, and it is now up to him to bless the boy. The poet points to the irony that the god she is praying to is that very son.

Tirumāl holds all the worlds inside his belly, yet Kōcalai held him in her womb. At the end of an age he sleeps on a banyan leaf by his own choice, but in her womb he lay bound by the power of her penance. He is "the Wondrous One" because he brings together things that cannot be joined.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'eṉvayiṉ tarum maintaṟku iṉi aruḷ
uṉvayattatu' eṉṟāḷ, ulaku yāvaiyum
maṉvayiṟṟiṉ aṭakkiya māyaṉait
taṉ vayiṟṟiṉ aṭakkum tavattiṉāḷ.