கம்பராமாயணம் 1485 · அயோத்தியா 2.2
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
திருந்தினார் - (நூல்களில்) தேறியவர்களாகிய கணித நூல் அறிஞர்கள்; நின் புதல்வற்கு - உன் மகனுக்கு, (முடி சூட்டுவதற்கு); பொருந்தும் - பொருத்தமான; நாள் - நல்ல நாள்; நாளை - நாளைக்கேயாகும்; என்றனர் - என்று சொன்னார்கள்; அன்ன சொல் கேட்ட - அந்த வார்த்தையைக் கேட்ட; செய்கழல் - புனைந்த வீரக்கழலணிந்த; பெருந்திண்மால் யானையான் - பெரிய வலிய மதமயக்கமுடைய யானையையுடைய தயரதன்; பிழைப்பு இல் செய்தவம் - தவறில்லாத தவத்தைச் செய்து; வருந்தினான் - வருத்திய மேனி உடைய வசிட்டன்; வருக என - வருக என்று அழைக்க; வசிட்டன் - வசிட்ட முனிவன்; எய்தினான் - வந்து சேர்ந்தான்.
திருந்தினார் என்றது கற்றறிவில் முற்றத்துறைபோய் அதன் பயனாய் வாழ்க்கையை முறைப்படுத்திக் கொண்டவர்கள். கடுமையான தவம் செய்தவன் என்பது தோன்ற ‘செய்தவம் வருந்தினான்’ என்று கூறினார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "The fitting day for your son is tomorrow," said
- those men of perfected learning; hearing those words, he of the wrought anklets,
- master of huge, strong, rut-maddened elephants, said, "Let him who has laboured
- in flawless penance come"; and Vacittaṉ arrived.
What the poem says
The astrologers announce that the right day for the coronation is the very next day. Tacarataṉ immediately sends for Vacittaṉ, the royal preceptor, described as one worn by long and faultless austerities.
The astrologers are called "the perfected ones": men whose learning was complete and who had shaped their lives by it. The haste of the timing will matter greatly in what follows.