கம்பராமாயணம் 1486 · அயோத்தியா 2.3

Section அயோத்தியா காண்டம் / 2. மந்தரை சூழ்ச்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(தயரதன் வசிட்டனைப் பார்த்து) நல் இயல் மங்கல நாளும் நாளை - நல்ல இயல்புகளையுடைய (கோள் நிலை உடைய) முகூர்த்த நாளும் நாளைக்கேயாகும்; (ஆதலால்) அவ் வில் இயல் தோளவற்கு - அந்த வில் பழகிய தோள் உடையவனாகிய இராமனுக்கு; ஈண்டு - இவ்விடத்தில்; வேண்டுவ - வேண்டியனவாய விரதம் முதலிய சடங்குகளை; ஒல்லையின் - விரைவாக, இயற்றி - செய்து; (அதன்மேல்) நல் உறுதி - நல்ல அரசியல் அறமாகிய, வாய்மையும் - உண்மைகளையும்; பெரிது சொல்லுதி - மிகவும் சொல்வாயாக; என - என்று; தொழுது - வணங்கி; சொல்லினான் - சொன்னான்.

பட்டாபிஷேகம் செய்வதற்குரிய முகூர்த்த தினமும், தினசுத்தமும், கோளும் நாளும் நன்னிலை நிற்க அமைதலும் முதலியன வேண்டுதலின் அது மிக அரிதாகவே அமைதலின், நாளைக்கே நல்லியல் மங்கலநாள் என்றனர் கணிதநூல் வல்லோர். உடனே செய்ய வேண்டிய முடிசூட்டு விழாவிற்கு முன்னதாகிய சடங்குகளை விரைவில் செய்ய வேண்டுதலின் ‘ஒல்லையின் இயற்றி’ என்றான். ஆசிரியனாக இருந்து கற்பித்தான் ஆதலின் அரசியல் உறுதிகளை எடுத்துரைக்க வசிட்டனை வேண்டினான் தயரதன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "The auspicious day of favourable signs is tomorrow; for him
  2. whose shoulders are trained to the bow, whatever is needed here
  3. perform without delay, and good counsel and truths
  4. speak to him at length," he said, with joined palms.

What the poem says

Tacarataṉ tells Vacittaṉ that the auspicious moment falls tomorrow. Such a conjunction of good day, planets and stars is rare, so the preliminary rites and vows for the coronation have to be done at once.

He also asks the sage, who was Irāmaṉ's teacher, to give his pupil thorough instruction in the duties of a king. That instruction occupies the next several verses.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'nal iyal maṅkala nāḷum nāḷai; av
vil iyal tōḷavaṟku īṇṭu vēṇṭuva
ollaiyiṉ iyaṟṟi, nal uṟuti vāymaiyum
colluti peritu' eṉat toḻutu colliṉāṉ.