கம்பராமாயணம் 1487 · அயோத்தியா 2.4
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
முனிவனும் - வசிட்டனும்; உவகையும் தானும் முந்துவான் - தன் மகிழ்ச்சிக்குத் தான் முற்பட்டுச் செல்வானாய்; மனுகுல நாயகன் - வைவஸ்வத மனுவின் வமிசத்தில் தோன்றிய இராமனது; வாயில் - அரண்மனை வாயிலை; முன்னினான் - அடைந்தான்; அனையவன் - அந்த வசிட்டனது; வரவு கேட்டு - வருகையைக் கேள்வியுற்று; அலங்கல் வீரனும் - மாலையணிந்த இராமனும்; இனிது - இனிமையாக; எதிர்கொண்டு - வரவேற்று (அழைத்துக் கொண்டு); தன் இருக்கை - தன் இருப்பிடத்தை; எய்தினான் - அடைந்தான்.
மனு குலம் - மக்கள் குலம் என்றுமாம். உவகையும் தானும் என்றது வசிட்டனது மகிழ்ச்சியோ, அவனோ முன்னாற் சென்றனர் என அறிய முடியா வண்ணம் ஆர்வத்துடன் விரைவாகச் சென்றான் என்பதாம். பெரியோரை எதிர் கொண்டு அழைத்துச் சென்று இருக்கையில் அமர்த்தித் தாம் அமர்தல் என்பது ஆன்றோர் ஆசாரம். முந்துவான் - முந்தி - முற்றெச்சம், அலங்கல் - அசைதல் - அத்தொழிலையுடைய மாலைக்கு ஆகுபெயர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The sage, his joy and he himself racing to be first,
- reached the gate of the lord of Maṉu's line;
- hearing of his coming, the garlanded hero
- welcomed him gladly and brought him to his own seat.
What the poem says
Vacittaṉ hurries to Irāmaṉ's palace so eagerly that one cannot tell whether he or his joy arrives first. Irāmaṉ, a descendant of Maṉu, comes out to meet him and leads him in to be seated.
Going out to meet an elder, escorting him in and seating him before sitting oneself was the courtesy expected of the well-bred, and Irāmaṉ observes it.