கம்பராமாயணம் 1488 · அயோத்தியா 2.5
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஒல்கல் இல் தவத்து - தளர்ச்சி இல்லாத தவத்திற் சிறந்த; உத்தமன் - புண்ணியனாகிய வசிட்டன்; ஓது நூல் - கற்றற்குரிய நூல்களையும்; மல்கு கேள்விய - நிரம்பிய கேள்வியறிவினையும் உடைய; வள்ளலை - இராமனை; நோக்கினான் - பார்த்து; போர் வலாய்! - போரில் வல்லவனே; புல்கு காதல் புரவலன் - (உன்பால்) நெருங்கிய பிரியத்தை உடைய அரசன் தயரதன்; நினக்கு - உனக்கு; நானிலம் - அரசாட்சியை; நாளை - நாளைக்கு; நல்கும் - தருவான்; என்றான் - என்று சொன்னான்.
ஒல்குதல் - வளைதல்; இங்கே தவத்துக்கு வளைதல் ஆவது தளர்ச்சியாதலின் தளர்ச்சியில்லாத தவம் என்று உரை ஆயிற்று. கற்றறிவாகிய நூற் கல்வியைக் கேள்வி பின்னும் அகலப்படுத்தலான் கேள்வியைப் பின் வைத்தார். கேள்வியாவது - கேட்கப்படும் நூல்களைக் கற்றறிந்தார் கூறக் கேட்டல். கற்றவழி அதனின் ஆய அறிவை வலியுறுத்தலானும், கல்லாத வழியும் அதனை உண்டாக்குதலானும் இது கல்வியின்பின் வைக்கப்பட்டது என்ற பரிமேலழகர் உரையை இங்குக் கருதுக (குறள் 42ஆம் அதிகாரம் முகவுரை). நானிலம் - நால் நிலம் - முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என உலகம் நான்காகப் பகுக்கப்படுதலின் உலகத்தைக் குறிப்பதாயிற்று. பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை. அது ஈண்டு உலகத்தை ஆளும் அரசாட்சியுரிமையைக் குறித்தது. ஆகுபெயர். கேள்விய - கேள்விகளை உடைய - குறிப்புப் பெயரெச்சம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The excellent one of unflagging penance looked at the generous prince,
- full of the books he had studied and the learning he had heard,
- and said: "Mighty in battle, the king, who holds you in close love,
- will give you the four-fold earth tomorrow."
What the poem says
Vacittaṉ tells Irāmaṉ the news directly: tomorrow his loving father will give him the kingdom. The earth is called "four-fold" because Tamil tradition divides land into four regions, forest, hills, farmland and seashore.
Irāmaṉ is praised as learned both from books and from listening to the wise; listening is placed second because, as the classical commentary on the Tirukkuṟaḷ explains, it deepens what reading has taught and supplies what was never read.