கம்பராமாயணம் 1489 · அயோத்தியா 2.6

Section அயோத்தியா காண்டம் / 2. மந்தரை சூழ்ச்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1என்று , பின்னும் இராமனை நோக்கி , 'நான்
ஒன்று கூறுவது உண்டு உறுதிப் பொருள் ;
நன்று கேட்டுக் கடைப் பிடி நன்று ' எனத்
துன்று தாரவற் சொல்லுதல் மேயினான் .

பொருள் · Meaning in Tamil

என்று - என்று சொல்லி; பின்னும் - மேலும்; இராமனை நோக்கி - இராமனைப் பார்த்து; நான் கூறுவது உறுதிப்பொருள் ஒன்று உண்டு - நான் (உனக்குச் சொல்ல வேண்டுவதாய்) நன்மைப் பொருள் ஒன்று உள்ளது; நன்று கேட்டு - அதைக் கவனித்துக் கேட்டு; நன்கு கடைப்பிடி - அழுத்தமாகப் பின்பற்றுவாயாக; எனா - என்று; துன்று தாரவற்கு - நெருங்கிய மாலை அணிந்த இராமனுக்கு; சொல்லுதல் மேவினான் - சொல்லத் தொடங்கினான்.

உறுதிப்பொருள் - நன்மைதரும் செய்தி - அறவுரை என்றாகும். ‘ஒன்று’ என்று கூறுவது தொடங்குங்காற் கூறும் வழக்குப்பற்றி. பின்னர்ப் பலவும் கூறினும் அவையெல்லாம் ‘உறுதிப்பொருள்’ என்ற ஒன்றில் அடங்குதலின் அதுபற்றி ஒன்றும் ஆகும். கடைப்பிடி உறுதியாகப் பற்றுதல் ஆகும். இறுதிவரை விடாது ஒழுகுதல் கடைப்பிடியாம். ‘துன்றுதாரவன்’ எனச் சந்தி பிரியாதது அங்ஙனம் பிரிப்பின் எழுவாய்த்தொடராய்ப் பொருள்தந்து மயக்கமாம் ஆதலின் இது வேற்றுமைத் தொகைநிலைத்தொடர் என்பது உணர்தற்கு மஈறு மெய்திரிதலாகிய புணர்ச்சி பெற்ற நிலையில் ‘தாரவற்’ எனப் பிரித்துக்காட்டியமை போற்றி உணர்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. So saying, he turned again to Irāmaṉ: "There is
  2. one thing I must tell you, a matter of lasting good;
  3. hear it well and hold to it firmly"; and so
  4. he began to speak to the one of the thick garland.

What the poem says

Vacittaṉ now begins his formal counsel to the prince about to become king. He calls it "one thing", a customary way of opening, since all his many points come under a single heading: what is truly good for a ruler.

He asks Irāmaṉ not only to listen carefully but to hold to the advice firmly to the end of his life. The counsel runs on for many verses.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟu, piṉṉum irāmaṉai nōkki, 'nāṉ
oṉṟu kūṟuvatu uṇṭu uṟutipporuḷ;
naṉṟu kēṭṭuk kaṭaippiṭi naṉku' eṉa
tuṉṟu tāravaṟ collutal mēyiṉāṉ.